டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தான் குடியரசுத் தேர்தலில் ஆதரவு!

டிடிவி தினரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா?

டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்பட வேண்டும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் 34 பேர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினர். அப்போது, எம்ஜிஆர் நூற்றாண்டு விழா டிடிவி தினகரன் தலைமையில் நடத்த வேண்டும். இப்தார் நிகழ்சியிலும் டிடிவி தினகரன் தான் தலைமை ஏற்க வேண்டும். மேலும், அதிமுக-வில் டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு டிடிவி தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவு அளிக்கப்படும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக சிறையில் இருந்து வெளிவந்த அதிமுக-வின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்துப் பேசினார். சட்டமன்றக் கூட்டத் தொர் நடைபெற்று வரும் சூழல், விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் என இந்நிலையில் இந்த சந்திப்பு முக்கித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

×Close
×Close