முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு குடும்ப அரசி அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு பையில் பொங்கல் பண்டிகை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் இடம்பெற வில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதன் மூலம், தமிழ் புத்தாண்டை சித்திரை 1ம் தேதியில் இருந்து தை 1ம் தேதிக்கு மாற்றும் சர்ச்சைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
திமுகவின் 2006 – 2011 ஆட்சிக் காலத்தில், அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியால் 2008ம் ஆண்டு பொங்கல் பண்டிகையான தை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு சித்திரை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இதற்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். 2011ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சித்திரை 1ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்பட்டது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, மீண்டும் தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்படும் என்ற ஊகங்கள் வெளியானது. அத்தகைய ஊகங்களுக்கு வலுசேர்க்கும் வகையில், கடந்த நவம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அறிவித்த பொங்கல்
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டை சித்திரை 1ம் தேதியில் இருந்து தை 1ம் தேதிக்கு மாற்றுவது குறித்த யூகங்களுக்கு திமுக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், பொங்கல் பரிசு வழங்கும் பையில் அச்சிடப்பட்ட முதல்வரின் வாழ்த்துச் செய்தியில், ‘தமிழ்ப் புத்தாண்டு’ என்று குறிப்பிடப்படவில்லை. ‘பொங்கல்’ என்ற சொல்லையும் தவிர்த்துவிட்டு, வாழ்த்துச் செய்தியில் ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்’ என்ற என்று வாழ்த்து தெரிவிக்கப்படுள்ளது.
இருப்பினும், பொங்கல் வாழ்த்துச் செய்தியில் ‘தமிழர் திருநாள் வாழ்த்துகள்’ என குறிபிடப்பட்டிருந்தாலும், தை முதல் நாளில் தமிழ்ப் புத்தாண்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கொள்கை நிலைப்பாட்டை திமுக முழுமையாகக் கைவிடவில்லை என்பதையே காட்டுகிறது என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில், பொங்கல் பரிசு தொகுப்பு பையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்று இடம்பெறவில்லை என்பது உறுதியாகியுள்ளதால், அப்படி குறிப்பிட்டு பொங்கல் பரிசு பை என்று ஒரு வீடியோ வெளியானதே அது எப்படி? யார் சித்தரித்தது? எதற்காக அந்த சர்சை உருவாக்கப்பட்டது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“