இனி அரக்க பறக்க ஓட வேண்டாம் : சென்னை விமானநிலையத்தில் அமலுக்கு வந்தது புதிய நடைமுறை

Chennai airport : பயணிகள் வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்ட பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றால் போதும். இந்த காலக்கெடுவிற்குள் அங்கிருந்து புறப்பட்டு விட வேண்டாம்...

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் வரும் வாகனங்கள் குறிப்பிட்ட காலகெடுவுக்குள் கிளம்ப வேண்டும் இல்லையெனில் கூடுதல் கட்டணம் என்ற நடைமுறை இன்று (ஜூலை 15ம் தேதி) முதல் தளர்த்தப்படுவதாக ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

சென்னை விமானநிலையத்தில் பயணிகள் வரும் மற்றும் ஏறிச்செல்லும் வாகனங்கள், நிறுத்தப்பகுதிகளில் 10 நிமிடங்களுக்கு அதிகமாக நின்றால், ரூ.120 கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலில் இருந்தது. இனி அந்த நடைமுறை தளர்த்தப்படுகிறது.புதிய நடைமுறையின்படி, பயணிகள் வரும் வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட்ட பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றால் போதும். இந்த காலக்கெடுவிற்குள் அங்கிருந்து புறப்பட்டு விட வேண்டாம் என்ற நிர்பந்தம் இல்லை. இருந்தபோதிலும், நோ பார்க்கிங் பகுதியிலோ அல்லது தடை செய்யப்பட்ட பகுதியிலோ ஆட்களை இறக்கி விடும் வாகனங்களுக்கு 30 நிமிட நிறுத்த கட்டணத்திலிருந்து 4 மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அதிகாரி ஒருவர் கூறியதாவது, கார்கள் மற்றும் மற்ற வாகனங்கள், பயணிகளை இறக்கிவிட போதுமான நேரம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அவர்கள் டெர்மினல் முன்பாக தங்கள் வாகனங்களை நிறுத்தக்கூடாது. இதுகுறித்து கண்காணிப்பு மேற்கொள்ள ஆங்காங்கே, விமானநிலைய ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள். டெர்மினல் முன்பாக பயணிகளை இறக்க தனியார் வாகனங்கள் மற்றுள் ஏர்போர்ட் அத்தாரிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களுக்கு இலவச அனுமதி. மற்ற வாகனங்கள் கார்நிறுத்த பகுதியில் நிறுத்த 30 நிமிடங்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும்.

புதிய நடைமுறையால் விபத்துகள் குறையும்

விமானநிலையத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் Radio Frequency Identification card (RFID)வழங்கப்படும். இந்த RFID முறையின் மூலம் அந்த வாகனங்கள், விமானநிலைய வளாகத்தில் எவ்வளவு நிமிடங்கள் இருக்கின்றன என்பதை கண்காணிக்க முடியும். இதனைக்கொண்டு கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா அமைப்பிடம் இல்லை. 10 நிமிடத்திற்குள் பயணிகளை இறக்கிவிட்டு கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் டெர்மினல் முன் உள்ள பாலத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. அவசரகதியில் புறப்படும் வாகனங்களால், கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த புதிய நடைமுறையின் மூலம், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்திய விமான பயணிகள் சங்க தேசி தலைவர் சுதாகர ரெட்டி இதுகுறித்து கூறியதாவது, புதிய நடைமுறை வரவேற்கத்தக்கது.இதன்மூலம், பயணிகள் மிகுந்த பயன்பெறுவர். அவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் போன்ற கடைசிநேர இடையூறுகளுக்கு ஆளாவதிலிருந்து தப்பித்துக்கொள்வர் என்று ரெட்டி கூறினார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close