பார் கவுன்சில் தேர்தலில் நோட்டோ : பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பார்கவுன்சில் தேர்தலில் நோட்டா பெருத்த கோரிய மனுவை பரிசீலிக்க தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பார்கவுன்சில் தேர்தலில் நோட்டா பெருத்த கோரிய மனுவை பரிசீலிக்க தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் சிறப்பு குழுவிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.ஆறுமுகம் சார்பில் தாக்கல் செய்த மனுவில், சுகத்திர இந்தியாவில் தேர்தல் என்பது மிக முக்கியனது. இதில் வாக்களிப்பதும் யாருக்கு வாக்களிக்க வில்லை என்பதை பதிவு செய்வதற்கும் அனைவருக்கும் உரிமை உள்ளது. இதனை நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் செயல்படுத்தபட்டு வருகின்றது.

இந்நிலையில் வரும் மார்ச் 28 ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சிலுக்கான தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் 25 ஆம் தேதி அறிவிப்பு வெளியிடபட்டது. இந்த தேர்தலில் வாக்குசீட்டு முறை மட்டுமே பயன்படுத்தபடுகின்றது. இந்த தேர்தலில் வழக்கறிஞர்கள் வாக்களிக்க உள்ளனர். போட்டியிடும் வேட்பாளர்கள் யாரையும் ஆதரித்து வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா வாக்குச்சீட்டில் இடம் பெறவில்லை. தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பது அனைவரின் உரிமை எனவே வாக்கு சீட்டுகளில் நோட்டாவுக்கு தனியாக ஒரு இடத்தை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும். இது தொடர்பாக கடந்த 27 ஆம் தேதி தமிழ்நாடு பார்கவுன்சில் நாராயணனிடம் கோரிக்கை மனு அளித்தேன். ஆனால் எனது மனு மீது பார்கவுன்சில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக வாக்கு சீட்டில் நோட்டாவிற்கு தனியாக ஒரு இடத்தை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான நமேநாராயணன், நோட்டாவுக்கு தனியாக போட்டியிடும் வாக்களர்களுக்கு கீழ் கடைசியாக தான் இந்த இடத்தை அளக்க கோருவதாகவும் ஆனால் எனது கோரிக்கை மனு மீது இதுவரை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரவித்தார்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், பார்கவுன்சில் தேர்தலில் நோட்டாவை சேர்ப்பது தொடர்பாக, தற்போது உள்ள சிறப்பு குழு மனுதரார் கோரிக்கை பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்து வழக்கை முடித்துவைத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close