ஓ.பி.எஸ் இளைய சகோதரர் மரணம்; தொலைபேசியில் ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

AIADMK Coordinator O Panneerselvam's, O Panneerselvam's brother o balamurugan passes away, ops brother o balamurugan dies at 61, o balamurugan death, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், ஓ பன்னீர் செல்வத்தின் இளையமகன் மரணம், ஓபிஎஸ் இளைய சகோதரர் ஓ பாலமுருகன் மரணம், முதல்வர் ஸ்டாலின் இரங்கல், ops brother dies, ops, aiadmk

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானர். அவருக்கு வயது 61.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மூன்றாவது சகோதரர் ஓ.பாலமுருகன். இவரது மனைவி லதா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர் குடும்பத்துடன் தேனிமாவட்டம் பெரிய குளம் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தார். ஓ.பாலமுருகன் விவசாயம் செய்துவந்தார். அதோடு பால்பன்ணையும் நடத்தி வந்தார்.

இந்த சூழலில், ஓ.பாலமுருகன் 2 ஆண்டுகளுக்கு முன்பு இதயநோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, அவர் சென்னை மதுரை நகரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இதையடுத்து, அவரது உடல்நிலை சரியானது. இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர், திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமானதால் பெரிய குளத்துக்கு கொண்டுவரப்பட்டார். இதையடுத்து, அவர் இன்று (மே 14) அதிகாலை 4 மணிக்கு காலமானார். ஓ.பன்னீர்செல்வம் இது குறித்து தகவல் அறிந்ததும் சென்னையில் இருந்து பெரியகுளத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசியில் அழைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பாலமுருகனை இழந்துவாடும அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: O panneerselvams brother o balamurugan passes away

Next Story
அரபிக் கடலில் புயல் சின்னம்; மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கைChennai weather update New cyclone formed in Southeast Arabian sea
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com