Advertisment

AIADMK General Council Meeting: சலசலப்புடன் முடிந்த பொதுக்குழு; டெல்லி புறப்பட்டார் ஓ.பி.எஸ்

இன்று நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் நொடிக்கு நொடி பரபரப்பு நிலவுகிறது

author-image
WebDesk
New Update
AIADMK General Council Meeting: சலசலப்புடன் முடிந்த பொதுக்குழு; டெல்லி புறப்பட்டார் ஓ.பி.எஸ்

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த 9 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனித் தனியே தீவிர ஆலோசனை நடத்தி வந்தனர்.

Advertisment

இன்று நடைபெறும் பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என்பதால் ஓபிஎஸ் தரப்பு பொதுக்குழு நடத்தக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. முதலில் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அளித்த ஓபிஎஸ், எந்த பதிலும் இல்லை என்பதால்  ஆவடி காவல் ஆணையரிடம் பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என்று மனு அளித்தார். ஆனால் காவல்நிலையம் இந்த மனுவை ஏற்கவில்லை நிராகரித்துவிட்டது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடக்கும் கூட்டத்திற்கு காவல்துறை தடைவிதிக்க முடியாது என்று மறுத்துவிட்டது. மேலும் ஓபிஎஸ்-யின் ஆதரவாளர்கள் எடப்பாடி பழசாமி பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்தனர். இதனால் ஓபிஎஸ்-க்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. இதில்  அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்க முடியாது என்றும், பொதுக்குழுவில் அ.தி.மு.க சட்ட விதிகளை திருத்த தடை இல்லை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  இது மேலும் ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவு ஏற்படுத்தியது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:13 (IST) 23 Jun 2022
    டெல்லி புறப்பட்டார் ஓ.பி.எஸ்; ரவீந்திரநாத் உள்ளிட்டோரும் பயணம்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., உள்ளிட்டோர் டெல்லி புறப்பட்டனர்



  • 18:26 (IST) 23 Jun 2022
    ஒ.இ.எஸ், ரவீந்திரநாத், மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் இரவு டெல்லி பயணம்

    அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் எம்.பி., மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் இரவு டெல்லி பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • 18:07 (IST) 23 Jun 2022
    அடுத்த பொதுக்குழு நடக்க சாத்தியமே இல்லை - ஓ.பி.எஸ் தரப்பு பரபரப்பு பேட்டி

    ஓ.பி.எஸ் ஆதரவாளர்களன வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்தனர். “பேராசை, பதவிவெறியில் அவர்கள் (இ.பி.எஸ் தரப்பு)... பேச்சுவார்த்தைக்கு தயார்... அடுத்த பொதுக்குழு நடக்க சாத்தியமே இல்லை..” என்று தெரிவித்தனர்.



  • 16:04 (IST) 23 Jun 2022
    ஓ.பன்னீர்செல்வம் உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி ஆகியோர் சந்திப்பு

    சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் உடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி ஆகியோர் சந்தித்து பேசியுள்ளார். முன்னதா எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில் ஓபிஎஸ்- ஐ சந்தித்தள்ளார்.



  • 15:56 (IST) 23 Jun 2022
    அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை - வைத்திலிங்கம்

    வரும் ஜூலை 11-ந் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ள நிலையில், என்று அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம் எனறும் கூறியுள்ள வைத்திலிங்கம் அதிமுக பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம் அதிமுகவின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்; அவைத் தலைவரை நியமித்த தீர்மானம் செல்லாது இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்



  • 15:54 (IST) 23 Jun 2022
    அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை - வைத்திலிங்கம்

    வரும் ஜூலை 11-ந் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறும் இபிஎஸ் தரப்பு அறிவித்துள்ள நிலையில், என்று அடுத்த பொதுக்குழு கூடுவதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர உள்ளோம் எனறும் கூறியுள்ள வைத்திலிங்கம் அதிமுக பொதுக்குழு ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் புதிதாக கொண்டு வந்த தீர்மானத்தை நிராகரித்து வெளிநடப்பு செய்தோம் அதிமுகவின் நடைமுறைகளை மாற்றியுள்ளனர்; அவைத் தலைவரை நியமித்த தீர்மானம் செல்லாது இன்று பொதுக்குழுவில் நடந்த சம்பவங்கள் சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும் அவர் கூறியுள்ளார்



  • 15:52 (IST) 23 Jun 2022
    ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் - தமிழ்மகன் உசேன்

    ஒரே கட்சி, ஒரே உணர்வுடன் தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் - ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்ட சம்பவம் குறித்து எனக்கு தெரியாது என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.



  • 13:22 (IST) 23 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்ட பரபரப்பு: மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்!

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில், அதிமுக அவைத்தலைவராக் தேர்வு செய்யப்பட்ட தமிழ்மகன் உசேன் உட்பட பொதுக்குழுவில் பேசிய எவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெயரை குறிப்பிடவில்லை. இதனால் பொதுக்குழு கூட்டத்தில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார்



  • 13:16 (IST) 23 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்!

    அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் புகைப்படங்கள்.



  • 13:15 (IST) 23 Jun 2022
    "எடப்பாடியார் தான் வேண்டும், ஓ.பி.எஸ் தேவையில்லை " - அதிமுக முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள்!

    இன்று அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சிலர் நமது செய்தியாளரிடம், எடப்பாடியார் தான் வேண்டும், ஓ.பி.எஸ் தேவையில்லை என்று வலியுறுத்தி பேசும் வீடியோ கட்சி.



  • 12:51 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்

    ஜூலை 11ல் நடைபெற உள்ள பொதுக்குழுவில் இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டியளித்தார்.



  • 12:48 (IST) 23 Jun 2022
    திமுகவை எதிர்க்க இரட்டை தலைமையால் முடியவில்லை!

    திமுக அரசை எதிர்த்து இரட்டை தலைமையால் கடுமையாக செயல்பட முடியவில்லை. அதிமுகவில் இரட்டை தலைமையை ரத்து செய்து விட்டு, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்று வலிமையான ஒற்றை தலைமையை கொண்டு வர வேண்டும். அடுத்த பொதுக்குழுக்கான தேதியை இன்றே இறுதி செய்ய வேண்டும்.



  • 12:34 (IST) 23 Jun 2022
    அதிமுக பொதுக்குழு கூட்டம் நிறைவு!

    பரபரப்பான சூழலில் கூடிய அதிமுக பொதுக்குழு கூட்டம், எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நிறைவடைந்தது. இரட்டை தலைமையை ரத்து செய்து, ஒற்றை தலைமையை கொண்டுவர உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • 12:26 (IST) 23 Jun 2022
    ஓபிஎஸ் வந்த வாகனத்தின் டயர் பஞ்சர்!

    ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிடும் நிலையில், அவர் வந்த வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது.



  • 12:22 (IST) 23 Jun 2022
    ஓ.பி.எஸ். மீது தண்ணீர் பாட்டில் வீச முயற்சி..

    அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் பேச முயன்றபோது பொதுக்குழு மேடையில் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இதனால், ஓ.பி.எஸ் கோபமாக பொதுக்குழு மேடையை விட்டு வெளியேறினார்.



  • 12:12 (IST) 23 Jun 2022
    ஜூலை 11ல் மீண்டும் கூட்டம்!

    ஜூலை 11ல் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார்.



  • 12:11 (IST) 23 Jun 2022
    அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன்!

    அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவைத் தலைவர் தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார்.



  • 11:53 (IST) 23 Jun 2022
    அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு!

    அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர். ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். எனவே அடுத்த எப்போது செயற்குழு- பொதுக்குழு கூடும் என்பதை விரைவில் அறிவிப்போம். அதில் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும்- கே.பி. முனுசாமி.



  • 11:47 (IST) 23 Jun 2022
    தீர்மானங்களை நிராகரிப்பதாக சி.வி.சண்முகம் ஆவேசம்!

    பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரிப்பதாக பொதுக்குழுவில் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.



  • 11:40 (IST) 23 Jun 2022
    ஓ.பி.எஸ்.க்கு எதிராக உறுப்பினர்கள் கோஷம்!

    அதிமுக பொதுக்குழு நடைபெறும் மண்டபத்தில், ஓ.பி.எஸ்.க்கு எதிராக உறுப்பினர்கள் கோஷமிடுவதால் பரபரப்பு நிலவுகிறது.



  • 11:40 (IST) 23 Jun 2022
    ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-ஐ வரவேற்ற அவைத்தலைவர்!

    வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மண்படத்துக்கு வருகை தந்த ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்-ஐ மலர் கொத்து கொடுத்து அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் வரவேற்றார்.



  • 11:06 (IST) 23 Jun 2022
    அதிமுக பொதுக்குழு.. வானகரம் பகுதிக்கு வந்த இ.பி.எஸ்!

    அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு இ.பி.எஸ் வந்தடைந்தார். அவருக்கு ஆதரவாக தொண்டர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.



  • 11:05 (IST) 23 Jun 2022
    அதிமுக பொதுக்குழு.. தீர்மானங்கள் நிறைவேறுமா?

    அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. 23 தீர்மானங்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். ஒப்புதல் அளித்தார். 23 தீர்மானங்களை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.



  • 10:55 (IST) 23 Jun 2022
    பதிவேட்டில் 2 மாவட்ட நிர்வாகிகள் மட்டும் கையெழுத்து

    தேனி, பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் மட்டும் பொதுக்குழு பதிவேட்டில் கையெழுத்திட்டனர். பெருவாரியான உறுப்பினர்கள் அரங்கிற்குள் வந்துள்ள நிலையில், 2 மாவட்ட நிர்வாகிகள் மட்டும் கையெழுத்திட்டுள்ளனர்.



  • 10:46 (IST) 23 Jun 2022
    பொதுக்குழு மேடையிலிருந்து இறக்கினார் வைத்தியலிங்கம்

    துரோகி என்று தொண்டர்கள் கோஷமிட்டத்தால் பொதுக்குழு மேடையிலிருந்து வைத்தியலிங்கம் கிழே இறங்கினார். இபிஎஸ்-க்கு ஆதாரவாக பலர் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.



  • 10:30 (IST) 23 Jun 2022
    அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டது

    அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள பரபரப்பான சூழலில் அதிமுக தலைமை அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது.



  • 10:29 (IST) 23 Jun 2022
    பொதுக்குழுவிற்கு முதலில் வந்த ஓபிஎஸ்

    அதிமுக பொதுக்குழு நடைபெறும் வானகரம் பகுதிக்கு வந்தார் ஓ.பன்னீர்செல்வம் . எடப்படி பழனிசாமி வருவதற்குள் ஓபிஎஸ் முதலில் பொதுக் குழு நடக்கும் இடத்திற்கு வந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்



  • 10:09 (IST) 23 Jun 2022
    தொண்டர்களின் உணர்வு, குரலை யாராலும் தடுக்க முடியாது : ஓ.எஸ்.மணியன்

    தொண்டர்களின் உணர்வுக்கேற்ப பொதுக்குழு நடைபெறுகிறது. தொண்டர்களின் உணர்வு, குரலை யாராலும் தடுக்க முடியாது நீதிமன்ற உத்தரவு பின்னடைவல்ல என்று முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்



  • 10:00 (IST) 23 Jun 2022
    ஓபிஎஸ் வாகனம் திருமங்கலம் வழியே செல்ல திட்டம்

    பொதுக்குழு வானகரத்தில் கட்டும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனால் தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட ஓபிஎஸ் வாகன நெரிசலில் சிக்கியுள்ளது. ஓபிஎஸ் வாகனம் திருமங்கலம் வழியே செல்ல திட்டம் என்று தகவல் வெளியாகி உள்ளது



  • 09:52 (IST) 23 Jun 2022
    போலி பாஸ்களுடன் பலர் வந்துள்ளதாக தகவல்

    அதிமுக பொதுக்குழுவில் போலி பாஸ்களுடன் பலர் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2,500 பேர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் சிலர் போலி பாஸ்களுடன் வந்திருப்பதாக தகவல் போலி அடையாள அட்டையுடன் வந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதம்



  • 09:38 (IST) 23 Jun 2022
    வருகைப் பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கையெழுத்திடவில்லை

    வருகைப் பதிவேட்டில் பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் கையெழுத்திடவில்லை. பொதுக்குழுவிற்கு வரும் உறுப்பினர்கள் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவது நடைமுறை வருகை பதிவேடு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள போதும், எந்த உறுப்பினரும் கையெழுத்திடவில்லை எனத் தகவல்.



  • 08:59 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் போஸ்டர்கள் தீவைப்பு

    இபிஎஸ்-க்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைப்பு எனத் தகவல். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது



  • 08:57 (IST) 23 Jun 2022
    வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

    அதிமுக பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ள நிலையில், வானகரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. அதிமுக உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் வாகனங்கள் தொடர்ந்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • 08:54 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்

    அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.



  • 08:52 (IST) 23 Jun 2022
    தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை - ஆர்.பி.உதயகுமார்

    நீதிமன்றம் வழங்கிய அறிவுறுத்தல் 100% கடைபிடிக்கப்படும். நீதிமன்ற தீர்ப்பினால் எந்தவித பின்னடைவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்



  • 08:51 (IST) 23 Jun 2022
    ஈபிஎஸ் போஸ்டர்கள் தீவைப்பு

    ஈபிஎஸ்-க்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைப்பு எனத் தகவல். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது



  • 08:51 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்

    அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர். இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.



  • 08:42 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்

    அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். எடப்பாடி பழனிசாமி வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர். இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.



  • 08:42 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்

    அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. வாகன அணிவகுப்புடன் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார். வழிநெடுகிலும் ஆதரவாளர்கள் ஈபிஎஸ் வாகனம் மீது மலர்தூவி வரவேற்பு அளித்தனர். அதே நேரத்தில் ஓபிஎஸ் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டார்.



  • 08:32 (IST) 23 Jun 2022
    இபிஎஸ் போஸ்டர்கள் தீவைப்பு

    இபிஎஸ்-க்கு ஆதரவாக ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களுக்கு தீ வைப்பு எனத் தகவல். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்களுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக கூறப்படுகிறது



  • 08:18 (IST) 23 Jun 2022
    தீர்மானமாக நிறைவேற்ற முடியாது- நீதிபதிகள்

    பொதுக்குழு கூட்டத்தில் நடக்க உள்ளதை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள உரிமை உள்ளது என்றும் அஜெண்டாவில் இல்லாதவற்றை கூட்டத்தில் விவாதிக்கலாம் ஆனால் தீர்மானமாக நிறைவேற்ற முடியாது என்று மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.



  • 08:15 (IST) 23 Jun 2022
    23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற தடை

    அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற தடை என்று அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது



  • 08:14 (IST) 23 Jun 2022
    அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி

    மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் கிடைத்த வெற்றி - அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ்-ன் மகனுமான ரவீந்திரநாத்



Tamil News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment