Advertisment

சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: சுங்க இலாகா நடவடிக்கை

ஒரு கோடி ஐம்பத்தி நான்கு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

author-image
WebDesk
New Update
சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்: சுங்க இலாகா நடவடிக்கை

ஒரு கோடி ஐம்பத்தி நான்கு லட்சத்தி நாற்பத்தி ஒன்பதாயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், சுங்க இலாகா அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

publive-image

அப்போது மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணித்த பெண்ணை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அவரது உள்ளாடைக்குள் தங்க சங்கிலிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து ரூ.14 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 298 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மும்பையில் இருந்து சென்னை வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஒரு குழுவாக வந்த சென்னையை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய சோதனையில் ரூ.1 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 860 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சேதனையில், ரூபாய் 1 கோடியே 54 லட்சத்து 49 ஆயிரம் மதிப்புள்ள 3 கிலோ 158 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பெண் உள்பட 8 நபர்களை சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Gold Chennai Airport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment