Advertisment

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் குணமான 2-வது நபர்: 14 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுரை

அயர்லாந்து தலைநகரம் டப்ளின் நகரத்தில் இருந்து பயணித்த 21 வயது தமிழக வாலிபர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus rapid test, vijayabaskar

coronavirus rapid test, vijayabaskar

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முதலாம் கட்டத்தில் இருந்து, இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் நிலையில், நேற்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் வெளியிட்ட செய்தி குறிப்பு ஆறுதல் தரும் வகையில் உள்ளது.

Advertisment

அமைசச்சர் தனது ட்விட்டரில்," அயர்லாந்து தலைநகரம் டப்ளின் நகரத்தில் இருந்து பயணித்த 21 வயது நிரம்பிய தமிழக வாலிபர், தற்போது கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமமையாக குணமடைந்து விட்டார். நடத்தப்பட்ட இரண்டு கட்டாய சோதனைகளிலும் கொரோனா வைரஸ் நெகடிவாக வந்தது. இதனையடுத்து, அவர் மருத்தவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அடுத்த 14 நாட்கள் அவர் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார். அந்த இளைஞரை கண்காணித்த மருத்துவக் குழுவிற்கு வாழ்த்துக்கள்" என்று பதிவு செய்துள்ளார்.

 

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுடைய இரண்டு பேர் மருத்துவமனையில் பாதுகாப்பாக தனிமைபடுத்தப்பட்டு, வெற்றிகரமாக வீடு திரும்பியுள்ளனர். முன்னதாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு பயண வரலாறு கொண்ட 45 வயதுடைய ஒருவர், மார்ச் 19 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழகத்தில், இதுவரை 1143 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. அதில் 1067 பேருக்கு நெகடிவாக வந்துள்ளது. 35 பேருக்கு பாசிடிவாக வந்துள்ளது. 41 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில்,தமிழ்நாடு- தேசிய சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் மேலும் மூன்று புதிய வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. 73 வயது நிரம்பிய சென்னை முதியவர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும், 61 வயது நிரம்பிய ஒருவர் சேலம் மருத்துவக் கல்லூரியிலும், அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் கீழ்பாக் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு, நிலைத்தன்மையோடு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Coronavirus Corona Corona Virus Minister C Vijayabaskar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment