Advertisment

அ.தி.மு.க பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது - ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்க கூடாது; ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ் அளித்த மனுவின் விவரம் இங்கே

author-image
WebDesk
New Update
அ.தி.மு.க பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது - ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ் மனு

OPS files petition to stop ADMK general committee meeting in Avadi commissioner officer: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரி இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் மனு அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: 3 பேர் இ.பி.எஸ் அணிக்கு தாவல்: ஓ.பி.எஸ் அணியில் எஞ்சிய 9 மாவட்டச் செயலாளர்கள் யார், யார்?

அந்த மனுவில், அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் வரும் 23-06-2022 அன்று வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது என்கிற நடைமுறை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலும், புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறை, இருப்பினும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

அப்போது பொதுக் குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் கழக ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு முன்னறிவிப்பு இல்லாமல் சில மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சில தலைமைக் கழக நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கழகத் தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, 18-06-2022 அன்று அதே தலைமைக் கழகத்தில் கட்சித் தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன.

இந்தத் தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் என்னைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து, பொதுக் குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபு என்றும், இந்த தருணத்தில் தமிழகத்தின் அரசியல் நிலை குறித்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கருத்து தெரிவிப்பார்கள் என்றும், அக்கருத்து சிறப்பு அழைப்பாளர்களாக வரும் மூத்த முன்னோடிகளால் கழக வளர்ச்சிக்கு பயன்பட்டது, இதே மண்டபத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பலமுறை கழகத்தின் பொதுக் குழுக் கூட்டங்களை நடத்திய போதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள், எனவே 'இடமில்லை' என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் (அஜெண்டா) நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

18-06-2022 அன்று தலைமைக் கழகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதுடன், கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டது.

இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதையடுத்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டிவிட்டர் மூலம் நாள் வேண்டுகோள் விடுத்தேன்.

தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, 23-06-2022 அன்று நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் 19-06-2022 அன்று கழக இணை ஒருங்கிணைப்பாளருக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கழக சட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட்ட கழகச் செயலாளர் திரு. பா. பென்ஜமின் அவர்கள் மேற்காணும் செயற்குழு மற்றும் பொதுக் குழுவிற்கு பாதுகாப்பு கோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கழக சட்ட திட்ட விதிகள்படி, சட்ட நடவடிக்கை எடுக்க கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது.

மேலும், 23-06-2022 அன்று நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்று கழக இணை ஒருங்கிணைப்பாளர் எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளபடியாலும், திரு. பா. பென்ஜமின் அவர்கள் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கழகத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதியை மறுக்க வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.

publive-image

publive-image

publive-image

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Admk Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment