தொண்டர்களை சந்திக்க கிளம்பும் ஓ.பி.எஸ்...!

இன்று முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை நேரடியாக சந்திக்கியிருக்கிறார்.

ஓ.பி.எஸ். – இ.பி.எஸ். அணிகள் இடையேயான பேச்சுவார்த்தை இன்னமும் தொடங்காமல் இருக்கும் நிலையில், அதிமுக புரட்சித் தலைவர் அம்மா அணி சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், இன்று முதல் 31-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களை நேரடியாக சந்திக்கியிருக்கிறார்.

இதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து இன்று தன் பயணத்தை துவக்குகிறார். மேலும், எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை கொண்டாடவும், உள்ளாட்சி தேர்தல் பணி குறித்து விவாதிக்கவும், மாவட்டந்தோறும் செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்கு எம்.பி. மைத்ரேயன் தலைமை வகிக்கிறார். பன்னீர் செல்வம் சிறப்புரை ஆற்றுகிறார்.

×Close
×Close