ப.சிதம்பரத்தை அதிர வைத்த சென்னை ஏர்போர்ட் : டீ விலை ரூ135, காபி-ரூ180

சென்னை விமான நிலையத்தில் டீ, காபி ஆகியன அதிக விலைக்கு விற்கப்படுவதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் டீ, காபி ஆகியன அதிக விலைக்கு விற்கப்படுவதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இன்று வெளிப்படுத்தி இருக்கிறார். விலையைக் கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் வாங்க மறுத்ததாகவும் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவுகளில் தெரியப்படுத்தி இருக்கிறார்.

ப.சிதம்பரம் வெளியிட்ட முதல் ட்விட்டர் பதிவில், ‘சென்னை விமான நிலையத்தில் உள்ள ‘காபி டே’வில் டீ கேட்டேன். சுடு தண்ணீரும், டீ பையும் கொடுத்தனர், விலை ரூ.135. அதிர்ச்சியடைந்து, வாங்க மறுத்துவிட்டேன். நான் செய்தது சரியா? தவறா?.’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ப.சிதம்பரம் வெளியிட்ட மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘காபி விலை ரூ.180. அதை யார் வாங்குவார்கள்? எனக் கேட்டேன். அதற்கு ‘பலர்’ என பதில் வந்தது. நான் பழைமையாகி விட்டேனோ?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மத்திய அரசின் விமான நிலைய மேம்பாட்டு ஆணைய கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையத்தில் காபி, டீ ஆகியவற்றின் விலையை வெளிப்படுத்தி, விலைவாசி உயர்வை சுட்டிக் காட்டியிருக்கிறார் ப.சிதம்பரம்.

 

×Close
×Close