பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் திடீர் அனுமதி: மூளையில் அறுவை சிகிச்சை

Pattimanram speaker Bharathi baskar admitted apollo hospitals: பட்டிமன்றப் புகழ் பாரதி பாஸ்கர் அப்பல்லோவில் அனுமதி… திடீர் உடல்நலக் குறைபாடு

பட்டிமன்ற பேச்சாளர், நடுவர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாலமன் பாப்பையா, ராஜா உள்ளிட்டவர்களுடன் பட்டிமன்றங்களில் பங்கேற்று வருபவர் பாரதி பாஸ்கர். பட்டிமன்றங்கள் மூலமே புகழ் வெளிச்சத்திற்கு வந்தவர் பாரதி பாஸ்கர். இவர் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்ததோடு எம்பிஏ படிப்பும் படித்துள்ளார். உலகின் முன்னனி தனியார் வங்கியில் முக்கிய பொறுப்பில் பணியாற்றி வருகிறார். வங்கிப் பணிகளுக்கிடையே பட்டிமன்றங்களில் கலந்துக் கொண்டு பேசி வருகிறார். மெல்லிய நகைச்சுவை மற்றும் அற்புதமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் இவரது ரசிகர்களிடயே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இவர் சன் டிவியில் வாங்க பேசலாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர். அதோடு பட்டிமன்றங்களில் கலந்துக் கொண்டவருக்கு, மற்றொரு பேச்சாளரான ராஜாவோடு போட்டிதான் இருக்கும். இருவரின் பேச்சுக்கும், கவுண்ட்டர்களும் ரசிகர்கள் கரவொலி எழுப்பி ரசிப்பர். கடந்த சில நாட்களுக்கு முன், சாலமன் பாப்பையா, ராஜா மற்றும் பாரதி பாஸ்கர், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தனர்.

இந்த நிலையில், பாரதி பாஸ்கருகு இன்று தீடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்து இருக்கிறார்கள். மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

பாரதி பாஸ்கர் விரைவில் நலம் பெற்று வர அவரது நண்பகர்களும் ரசிகர்களும் வேண்டி வருகின்றனர். பாரதிக்கு பாஸ்கர் லட்சுமணன் என்ற கணவனும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pattimanram speaker bharathi baskar admitted apollo hospitals

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express