Advertisment

நோய்களை குணமாக்கும் பழையசோறு? ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசு

pazhaya soru old rice Medical Benefits : சோறு வீணாவதைத் தடுக்க இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் பழைய சோற்றை முன்னிலைபடுத்தி இந்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.    

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நோய்களை குணமாக்கும் பழையசோறு? ஆய்வுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசு

பகுதிக் குடலிய அழற்சி, அல்சர் போன்ற அழற்சியைக் கொண்ட குடல் நோய்களை குணப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை புதிய ஆய்வுத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Advertisment

சோறு வீணாவதைத் தடுக்க இரவு தண்ணீர் ஊற்றி மறுநாள் உண்ணும் பழைய சோற்றை முன்னிலைபடுத்தி இந்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது.

குடல் நோய்கள் தொடர்பான சிகிச்சைக்கு பழைய சோரின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய 2.7 கோடி ரூபாய் செலவில் 600 மனிதப் பரிசோதனைகளை உள்ளடக்கிய ஒரு ஆராய்ச்சி திட்டத்தை மாநில சுகாதாரத் துறை ஒப்புதல் வழங்கியது.

கிரோன் நோய் ஒரு சுய நோயெதிர்ப்பு நோய் ஆகும், அதாவது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உணவு-குடல் பாதையை தாக்கி, அதில் அழற்சியைத் தோற்றுவிக்கிறது. கிரோன் நோய்க்கு மரபியல் ரீதியான காரணம் இருக்கிறது, இந்த நோயால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் கொண்ட ஒரு நபருக்கு நோய்க்கான ஆபத்து அதிகம். அதிகமாக தொழில்மயமான, மேற்கத்திய நாடுகளில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதால், சுற்றுச்சூழலும் முக்கிய காரணியாக இருக்கக்கூடும் என்று அறிந்து கொள்ளப்பட்டுள்ளது

சென்னையிகுள் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் குடலிய அழற்சி நோய் கண்டறியப்பட்டது. ஆனால், இந்த நோயின் பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்துவிட்டது. உதாரணமாக, இந்தியாவில், சராசரியாக 1,00,000 பேரில் 45 பேரிடம் குடல் நோய்கள் காணப்படுகின்றன. இதற்கு, ஸ்டீராய்டு மருந்துகள், புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள், அறுவை சிகிச்சை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அறுவைசிகிச்சை காஸ்ட்ரோஎன்டாலஜி துறை,  நோயாளிகளுக்கு அருக்வை சிகிச்சை முறையை பயன்படுத்தாமல் பழைய சோறு உணவையும், சில அடிப்படை மருந்துகளை பரிந்துரைத்திருக்கின்றனர். மேலும், குடல் நோய்களுக்கு  தீர்வு காண்பதில் அதிக முன்னேற்றத்தையும் கண்டுள்ளனர்.

எனவே, பழைய சோறு உணவின் மருத்துவப் பண்புகள் குறித்து விஞ்ஞான ரீதியாக நிரூபிக்க, தமிழ்நாடு  மாநில மேம்பாட்டுக் கொள்கைக் கவுன்சிலால் இது தொடர்பான ஆய்வுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.   " என்று மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர் நாராயண பாபு கூறினார்.

மனித இரையகக் குடற்பாதையில் இருக்கும் குடல் நுண்ணுயிரிகளில், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் முக்கிய பங்களிக்கும், ஆயிரக் கணக்கான வெவ்வேறு பாக்டீரியாக்களும் இருக்கின்றன. ஆரோக்கியமற்ற உணவு அல்லது மன அழுத்தம் குடலில் உள்ள பாக்டீரியா சமநிலையை பாதிப்பதால், குடல் வீக்கம் ஏற்படுகிறது.

பழைய சோறு உணவில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், குடற்பாதையில் உள்ள பாக்டீரியா ஏற்றத்தாழ்வை சீரமைப்பதோடு, சுய நோயெதிர்ப்பைத் தடுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.

Lifestyle
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment