Advertisment

மு.க.ஸ்டாலினை முகநூலில் முற்றுகையிட்ட கேரள நெட்டிசன்கள்: முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு வற்புறுத்தல்

முல்லைப் பெரியாறு அணையை நீக்குவது குறித்து முடிவெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கேரளாவில் 40 லட்சம் மக்களின் உயிருக்கு விண்ணப்பிக்கிறோம்.” இது போன்ற கோரிக்கைகள் கேரள மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்துவருகின்றனர்.

author-image
WebDesk
New Update
இலங்கை தமிழர் நலன் காக்க குழு; தமிழக அரசு அறிவிப்பு

கேரளாவில் கனமழை பெய்துவருவதைத் தொடர்ந்து 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் சனிக்கிழமை 136 அடியாக உயர்ந்ததையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பக்கத்தில் கேரள மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

Advertisment

கேரளாவில் கடந்த 2 வாரங்களாக தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை 136 அடியை எட்டியது. இதனால், கேரள மக்கள் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து உடனடியாக நீரை வெளியேற்றி கேரள மக்களின் உயிரைக் காக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் முதலமைச்சரின் ஃபேஸ்புக் பக்கத்தில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

ஒரு ஃபேஸ்புக் பயனர், “ஐயா, தயவு செய்து தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் உயிரை அல்ல”. தயவுசெய்து உதவுங்கள். முல்லைப் பெரியாறுக்கு புதிய அணை தேவை” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஃபேஸ்புக் பதிவில் கம்மெண்ட் செய்து வருகின்றனர்.

கேரளாவில் ஸ்டாலினுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர், தமிழக முதல்வர் எங்களின் கவலைகளை நிவர்த்தி செய்வார் என எதிர்பார்க்கிறோம் என சிலர் பதிவிட்டுள்ளனர்.

ஒரு ஃபேஸ்புக் பயனர், “தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை என்றாலும், அண்டை மாநிலமான தமிழக அரசுமுல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்ற வாதத்தில் பிடிவாதமாக இருப்பதை நிறுத்த வேண்டும். மக்களின் பாதுகாப்பு குறித்து ஒரு புதிய அணை கட்ட வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டுள்ளார்.

அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியதை அடுத்து, முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரும் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. அணை பலவீனமாகிவிட்டதாகவும், அதனால் அணை உடையும் வாய்ப்பு உள்ளதை நிராகரிக்க முடியாது என்றும் சமூக ஊடகங்களின் பதிவுகளில் வாதிட்டு வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனத்தின் அறிக்கையும் விவாதத்திற்கு வந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை கட்டமைப்பு சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அணை உடைவதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

முல்லைப் பெரியாறு அண 1895ல் கட்டப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை உயர்த்த வேண்டும் என்பதில் தமிழகம் அரசு உறுதியாக உள்ளது. ஆனால், கேரளா அணை பலவீனமாக உள்ளதாகக் கூறிவருகிறது.

தற்போதுள்ள அணை பலமாக உள்ளதால் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 152 அடியாக உயர்த்த வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக உள்ளது. சிறிய அணை கட்டுவதற்கு தமிழக அரசு நிதியை கூட ஒதுக்கியுள்ளது. இருப்பினும், இதற்கு கேரளா தடைகளை உருவாக்குகிறது என்று தமிழக அரசு கூறி வருகிறது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட வேண்டும் என்றால் இரு மாநிலங்களும் ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

publive-image

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில், கம்மெண்ட் தமிழ் மொழியிலும், ஆங்கிலத்திலும் கம்மெண்ட் செய்துள்ள கேரளாவைச் சேர்ந்த சில ஃபேஸ்புக் பயனர்கள், “#SaveKerala decommissionmullaperiyardam

Sir,

தயவுசெய்து கேரளர்களின் உணர்வின் கீழ் நின்று 40 லட்சம் மக்களின் உயிரின் மதிப்பை கருத்தில் கொள்ளுங்கள்.

முல்லைப் பெரியாறு அணைக்கு ஏதேனும் கெடுதல் நடந்தால், நமது 40 லட்சம் உயிர்கள் இழக்கப்படும் decommissionmullaperiyardam SaveKerala” என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும், “கேரளாவில் 30 லட்சம் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ள முல்லை பெரியாறு அணை அகற்றப்பட வேண்டும்… DecommissionMullaperiyaarDam savekerala # RebuildNewDam #savelife” என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

“ஸ்டாலின் சார் நீங்கள் மிகவும் கனிவான மற்றும் இரக்கமுள்ள மனிதர் என்பது எனக்குத் தெரியும். எனக்குப் பிடித்த முதல்வர் ஸ்டாலின் சார். முல்லைப் பெரியாறு அணையை நீக்குவது குறித்து முடிவெடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். கேரளாவில் 40 லட்சம் மக்களின் உயிருக்கு விண்ணப்பிக்கிறோம்.” இது போன்ற கோரிக்கைகள் கேரள மக்கள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்துவருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Kerala Cm Mk Stalin Mullaiperiyaru
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment