முறைகேடாக குழந்தை தத்தெடுப்பு- அதிகாரிகளின் முயற்சியால் மீட்பு

கல்யாணமாகாத ஒரு பெண் இக்குழந்தையைப் பெற்றதாகவும், மேலும் வளர்க்க விருப்பம் காட்டாததால் தான் இந்த தம்பதிகள் தத்தெடுக்க உதவியதாக தெரியவந்துள்ளது.

illegal adoption in perambalur
illegal adoption in perambalur

குழந்தைகளின் பாதுகாப்பையும், பராமரிப்பையும் உறுதி செய்வதற்காக தொடங்கப்பட்டத் திட்டம்-  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநில அரசாங்கமும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவி, அதன் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட்டுகளை ஏற்படுத்தி குழந்தைகள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறது

இந்நிலையில் , பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட்டுக்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிதாசி ஒன்று வந்தது. அந்த கடித்தத்தில் பெரம்பலூரைச் சேர்ந்த தம்பதிகள் சட்ட விரோதமாக குழைந்தையைத் தத்தெடுத்துள்ளனர், இது குறித்து தாங்கள் விசாரிக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் சொல்லப்பட்டு இருந்தது.

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட் நடத்திய மேற்படி விசாரணையில் இந்த தம்பதி பெரம்பலூரில் உள்ள தனியார் கிளினிக் சட்ட விரோதமாகத் தான் குழந்தைதயைத் தத்தெடுத்துள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், கிளினிக் டாக்டர் தமிழரசி மற்றும் நர்ஸ் மேகலா இருவரும் இதற்கு உதவி புரிந்துள்ளனர். கல்யாணமாகாத ஒரு பெண் இக்குழந்தையை பெற்றதாகவும், மேலும் இக்குழந்தையை வளர்க்க விருப்பம் காட்டாததால் தான் இந்த தம்பதிகள் தத்தெடுக்க உதவியதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது, பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு யூனிட்டால் அக்குழந்தை பத்திராமகா மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  சிறார் நீதிச் சட்டத்தின்படி, சட்டவிரோதமாக தத்தெடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு அபராதம் அல்லது சிறையுடன் கூடிய அபராதம் விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Perambalur couple illegal adoption dcpu officials rescued the baby child illegal adoption news

Next Story
தீபாவளிக்கு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை பயன்படுத்த வேண்டுகோள் – அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com