Advertisment

Gold rate today: தங்கம் விலை மேலும் உயர்வு!

gold rate today in chennai: தங்கம் விலை மேலும் உயர்ந்துள்ளது. பெட்ரோல்-டீசல் விலையில் மாற்றம் ஏதுமில்லை.

author-image
WebDesk
New Update
Gold rate today: தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?

பவானிசாகர் அணை நிலவரம்

Advertisment

பவானிசாகர் அணையில் முழு கொள்ளளவு 105 அடியாகும். நீர்மட்டம் 82.34 அடியாக இருக்கிறது.

நீர் வரத்து 2,814 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 2,800 கன அடியாகவும் இருக்கிறது. நீர் இருப்பு 16.95 டிஎம்சியாக உள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்

நீர்மட்டம் 104.88 அடியாகும். நீர்வரத்து 2,973 கன அடியாக இருக்கிறது. நீர் வெளியேற்றம் 1500 கன அடியாகவும், நீர் இருப்பு 71.31 டிஎம்சியாக உள்ளது.

வானிலை நிலவரம்

தமிழகம், காரைக்கால், புதுச்சேரியில் கடலோரப் பகுதிகளில் பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோவை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் 22 கேரட் கிராம் தங்கம் ரூ.5,047க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ரூ.5,014க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் ரூ.14 உயர்ந்துள்ளது.

சவரன் தங்கம் ரூ.40,376 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ரூ.264 உயர்ந்துள்ளது.

24 கேரட் தூயத் தங்கம் கிராமுக்கு ரூ.5,506க்கும், சவரன் கிராமுக்கு ரூ.44,048க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் தங்கம் ரூ.36ம், சவரன் ரூ.288ம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நோட் ப்ளீஸ் லேடிஸ்… இந்த 5 உணவுகள் தினமும் உங்களுக்கு அவசியம்!

பெட்ரோல் விலை நிலவரம்

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 12ஆவது நாளாக இன்றும் மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கும், டீசல் ரூ.100.94க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment