எஸ்.எம்.எஸ்-ல் +2 ரிசல்ட்

+1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்படும்

தமிழகம் முழுவதும் 9 லட்சம் மாணவ, மாணவிகள் +2 தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ‘திட்டமிட்டப்படி நாளை மறுநாள் +2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்கும் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும். இணையதளத்திலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்’ என்று அவர் தெரிவித்தார்.
மேலும் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும். நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாகவும் விரைவில் முடிவெடுக்கப்படும்’ என்றார்.
முன்னதாக திருச்சியில் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், ‘பிளஸ் ஒன் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்படும்’ என்றும் தெர்வித்தார்.

×Close
×Close