மறைந்த பங்காரு அடிகளாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார். இவருக்கு வயது 82. கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்கள் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அவர் மரணமடைந்தார். சக்தி பீடத்தின் அருகில் இன்று மாலை 5.30 மணிக்கு பங்காரு அடிகளாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
இன்று காலை 9 மணி முதல் பொதுமக்கள் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரதர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ பங்காரு அடிகளாரின் மறைவு ஆழந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழக்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும், மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்ததன் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவு விதைகளை விதைத்தவர் அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” என்று அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“