”செயல்படாத அரசின் செயல்படுத்த முடியாத பயனில்லாத திட்டம் மோனோ ரயில்”: ராமதாஸ்

ஞாயிற்றுக் கிழமை ட்விட்டரில் பதிவிட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “செயல்படாத அரசின் செயல்படுத்த முடியாத பயனில்லாத திட்டம்”, என விமர்சித்தார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக, ரூபாய் 6 ஆயிரத்து 402 கோடி செலவில் மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட நிலையில், அத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்த முடியாத பயனில்லாத திட்டம் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை கொள்கை விளக்கக்குறிப்பு சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டபோது, சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, ரூபாய் 6 ஆயிரத்து 402 கோடி செலவில், இருவழித்தடங்களில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில், சென்னையில் 6 ஆயிரத்து 402 கோடி ரூபாய் செலவில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றும், பொதுப் போக்குவரத்தை உயர்த்த, மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில், 43.48 கி.மீட்டருக்கு இரு வழித்தடங்களில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் வழித்தடம் பூந்தமல்லி- கத்திரப்பாரா, போரூர்- வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும், 2-வது வழித்தடம் வண்டலூர்- வேளச்சேரி இடையே ரூ.3,135 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இத்திட்டம் குறித்து ஞாயிற்றுக் கிழமை ட்விட்டரில் பதிவிட்ட பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், “செயல்படாத அரசின் செயல்படுத்த முடியாத பயனில்லாத திட்டம்”, என விமர்சித்தார்.

×Close
×Close