Advertisment

பொதுமக்கள் இங்கு வர வேண்டாம்.. காவல்துறை திடீர் எச்சரிக்கை!

பொதுமக்கள் இந்த மலைப் பகுதிக்கு வர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
Police marksmanship training in Theni from Jan 9 to Feb 8

மேட்டுப்பாளையத்தில் 2 பேர் மீது துப்பாக்கிச்சூடு

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பகுதிகளில் காவல்துறையினருக்கான துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைந்துள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சுடும் பயிற்சித் தளம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு போலீசார் இங்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் மேற்கொள்வார்கள்.

Advertisment

இந்த நிலையில் ஜன.9ஆம் தேதி முதல் பிப்.8ஆம் தேதிவரை இந்தப் பகுதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இது தொடர்பாக தகவலை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக காவல்துறை தரப்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

அந்தச் செய்திக் குறிப்பில், “கடந்த 4 ஆண்டுகளாக துப்பாக்கிச் சூடும் பயிற்சி மையத்தில் பயிற்சிகள் நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்தாண்டு தேனி மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வருடாந்திர துப்பாக்கி சுடும் பயிற்சிகள் நடைபெறுகின்றன.

இந்தப் பயிற்சிகள் வரும் ஜன. 9ஆம் தேதி முதல் பிப். 8ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. ஆகவே, தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் கால்நடை மேய்ப்பவர்கள் இப்பகுதிக்குள் வரவேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment