Advertisment

கன்னியாகுமரி; இளம் பெண்ணுடன் நெருக்கம்.. காதல் பாதிரியாருக்கு வலைவீச்சு

கன்னியாகுமரி பாதிரியார் ஒருவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Police probe Kanyakumari Christian priests love affairs

கன்னியாகுமரி பாதிரியார் ஒருவர் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் பெனடிட் ஆன்றோ. கிறிஸ்தவ பாதிரியாரான இவர் பிலாங்கால் என்ற பகுதியில் உள்ள கத்தோலிக்க ஆலையத்தில் பங்கு தந்தையாக பணியாற்றுகிறார்.

இந்த ஆலயத்துக்கு இளம் பெண் ஒருவர் வந்துள்ளார். அந்தப் பெண்ணுடன் பாதிரியார் பெனடிட் ஆன்றோவுக்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் பாதிரியார் அப்பெண்ணுடன் வீடியோ சாட்டிங் செய்துள்ளார். மேலும் சில தருணங்களில் நெருக்கமாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் சமூக வலைதளங்களில் பரவின. முன்னதாக பாதிரியாரை ஒரு கும்பல் இந்தப் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் தலைமறைவாக உள்ள பாதிரியாரையும் தேடிவருகின்றனர். பாதிரியார் இளம் பெண் சம்பந்தப்பட்ட வீடியோ கால் சாட்டிங் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை அல்லோலப்படுத்துகின்றன.

செய்தியாளர் த.இ. தாகூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment