Police search for a man who kicked his pregnant wife to abort his baby : ஈரோடு அம்மாபேட்டையை சேர்ந்தவர் சின்னமுனியனூர் முனுசாமி. இவரது மனைவி ரம்யா. இருவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஐந்து வயதில் மகன் ஒருவர் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் கர்ப்பமானார் ரம்யா. தன்னுடைய குழந்தையின் ராசி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ஜோதிடர் ஒருவரை சந்தித்துள்ளார் முனுசாமி.
ஆனால் ஜோதிடர், ரம்யாவின் வயிற்றில் இருக்கும் இரண்டாவது குழந்தை பிறந்தால், அது முனுசாமியின் உயிருக்கு பெரும் ஆபாத்தாய் முடிந்துவிடும் என்று கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான முனுசாமி, ஞாயிற்றுக் கிழமையன்று குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
Advertisment
Advertisement
தன்னுடைய மனைவியிடம், இந்த குழந்தை பிறந்தால் உயிருக்கு ஆபத்து நேரிடும். எனவே சென்று கலைத்துவிடு என்று கூறியுள்ளார். ஆனால் அதற்கு ரம்யா மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முனுசாமி, ரம்யாவின் வயிற்றில் எட்டி உதைத்தார்.
அவரின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ரம்யாவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ரம்யாவை சோதித்த மருத்துவர்கள், அவருடைய கரு கலைந்துவிட்டதாக கூறினார்கள். தன்னுடைய நிலைக்கு காரணமான கணவரை கைது செய்ய வேண்டும் என்று கூறிய ரம்யா, அவர் குறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“