Advertisment

காவேரியில் கருணாநிதி: 'மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை' என தலைவர்கள் புகழாரம்

எமனையும் போராடி வீழ்த்தி அவர் அண்ணா அறிவாலயம் திரும்புவார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காவேரியில் கருணாநிதி: 'மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை' என தலைவர்கள் புகழாரம்

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதி, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு, அவரது உடல்நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டதாகவும், தொடர் மருத்துவ சிகிச்சையால், கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று இரவு அறிக்கை வெளியிட்டது. கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த கடைசி அப்டேட் அதுதான்.

Advertisment

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி உட்பட பல தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து இன்றும் விசாரித்துச் செல்கின்றனர்.

மேலும் படிக்க: கருணாநிதி உடல்நிலை LIVE UPDATES

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அளித்த பேட்டியில், "தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம். வாழ்நாளெல்லாம் தமிழர் நலனுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் பல சக்திகளை எதிர்த்து போராடியிருக்கிறார். அடக்குமுறைகள் மற்றும் எதேச்சதிகாரத்தை எதிர்த்து போராடியிருக்கிறார். பலமுறை சிறைவாசம் கண்டிருக்கிறார். இப்போது எமனோடு போராடுகிறார். எமனையும் ஜெயித்து மீண்டு வருவார்’ என குறிப்பிட்டார்.

'திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம்பெற்று கட்சிபணிக்கு திரும்ப வேண்டும்' என எஸ்டிபிஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: நள்ளிரவு வருவார் என்ற எதிர்பார்ப்பு... காலை வந்து விசாரித்த முதல்வர் பழனிசாமி

'திமுக தலைவர் கருணாநிதி நல்ல நிலையில் இருக்கிறார்; விரைவில் அவர் பூரண நலம்பெற்று வீடு திரும்ப வேண்டுகிறேன்' என காவேரி மருத்துவமனை வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி அளித்துள்ளார்.

'திமுக தலைவர் கருணாநிதி நலமாக இருப்பதால் தொண்டர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்; எமனையும் போராடி வீழ்த்தி அவர் அண்ணா அறிவாலயம் திரும்புவார்' என காவேரி மருத்துவமனை வளாகத்தில் திண்டுக்கல் லியோனி பேட்டி அளித்தார்.

மேலும் படிக்க: கருணாநிதி உடல்நலம் தொடர்பாக கல்லூரிகளுக்கு விடுமுறையா?

'திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரணநலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிறோம்; அவர் நலம்பெற்று விரைவில் நம்மிடையே வந்து பேசுவார் என நம்பிக்கை உள்ளது' என கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தபின் இயக்குநர் விக்ரமன் பேட்டி.

'அச்சம் நீங்கிய தமிழகத்தின் ஆணிவேர், மிச்சமிருந்த தமிழகத்தின் கடைசி நம்பிக்கை திமுக தலைவர் கருணாநிதி; அவரின் உடல்நலம் குன்றியிருப்பதை கண்டு கண்ணீர் வடிக்கிறேன்' என நாஞ்சில் சம்பத் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

'மருத்துவ நிபுணர்களின் உரிய முயற்சியால் திமுக தலைவர் கருணாநிதி நலம் பெற்று வருகிறார்' என திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Cauvery Hospital
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment