Pollachi jayaraman : பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்நிலையில் அதிமுக, இவ்வழக்கில் தொடர்புடைய நாகராஜ் என்பவரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுகிறது.
Pollachi jayaraman : பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
இந்நிலையில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் என்னைப் பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புகிறார்கள். அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. என் மீது பரப்பப்படும் அவதூறு தொடர்பாக டிஜிபியிடம் புகார் அளிக்க உள்ளேன்.
மேலும் படிக்க - பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு: அ.தி.மு.க.வில் இருந்து நாகராஜ் நீக்கம்!
பாதிக்கப்பட்டவர்கள் செய்தியாளர்களிடம் பேச தயாராக இருக்கிறார்கள். இவ்விவகாரத்தை முதன் முதலாக வெளியே கொண்டு வந்ததே நான் தான். இதுகுறித்து நானே தொலைக்காட்சியிலும், பத்திரிக்கையிலும் பேசி இருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் என்னை அணுகிய போது, நான் தான் அவர்களுக்கு தைரியம் சொல்லி காவல்துறையிடம் அனுப்பினேன். இதில், எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரியவில்லை. இப்போது புகார் அளித்திருக்கும் பெண் குடும்பத்திற்குக் கூட நான் தான் தைரியம் சொல்லி அனுப்பினேன்.
கூடுதல் விவரங்கள் : தமிழகத்தையே பதற வைக்கும் பொள்ளாச்சி கொடூர சம்பவம்...
நாகராஜ் முன்பு எனக்கு யாரென்றே தெரியாது. அதன்பிறகு தான், அவன் அதிமுகவைச் சேர்ந்தவன் என்று தெரியவந்ததால், உடனே அவனை கட்சியில் இருந்து நீக்கினோம்.
மேலும் படிக்க - குலை நடுங்கும் கொடூரம்: 150-க்கும் மேற்பட்ட மாணவிகளை சீரழித்த கும்பலுக்கு அரசியல் பின்னணி?
குற்றவாளிகளை அதிமுக பாதுகாக்கவில்லை. அவர்களை தண்டிக்கவே விரும்புகிறது. பொள்ளாச்சி சம்பவத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியிலிருந்து ஒருவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எந்தஒரு விசாரணைக்கும் நானும், என்னுடைய குடும்பமும் தயார்" என கூறியுள்ளார்.