பொள்ளாச்சி ஜெயராமனுக்கும் சபரீசனுக்கும் முற்றும் மோதல் ! - நற்பெயருக்கு களங்கம் என இருவரும் புகார்....

சபரீசன் மற்றுமின்றி, நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் மீதும் வழக்கு பதிவு செய்தார் பொள்ளாச்சி ஜெயராமன்

Pollachi Gang Rape Case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றது. தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மீது பல்வேறு தரப்பினர் குற்றசாட்டுகளை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி விவகாரத்தில் “தனது பெயரையும், தன் குடும்பத்தின் பெயரையும் களங்கப்படுத்தும் விதமாக, திமுக தலைவர் ஸ்டாலின், தன் மருமகன் சபரீசன் தூண்டுதலால், சமூக வலைதளங்களில் கருத்துகள் பதிவிடுவதாக” புகார் அளித்தார்.

சபரீசன் மற்றுமின்றி, நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் மீதும் வழக்கு பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கோபாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

லீகல் நோட்டீஸ் அனுப்பிய சபரீசன்

இந்நிலையில் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொள்ளாச்சி ஜெயராமன் நடந்து கொள்வதாக லீகல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார் சபரீசன்.
சபரீசனின் வழக்கறிஞர் நீலகண்டன் இது தொடர்பாக ஜெயராமனுக்கு அனுப்பிய சம்மனில் “எனது மனுதாரர் மீது பொய்யான, நம்பகத்தன்மையற்ற அறிக்கைகளை ஜெயராமன் வெளியிட்டுள்ளார்.

என்னுடைய மனுதாரர் திமுகவில் எந்த ஒரு பதவியும் வகிக்கவில்லை மேலும், அரசியல் ஆர்வமும் அற்றவர். தேவையில்லாத புகார்கள் அளித்து, என் மனுதாரரின் புகழுக்கும் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அறிக்கைகள் வெளியாகி வருகின்றன என்று அந்த மனுவில் நீலகண்டன் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளியிட்டது ஏன் ?

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close