Advertisment

Pollachi Case : அச்சம் தந்த பொள்ளாச்சி சம்பவம்... துப்பாக்கி அனுமதி கோரும் இளம்பெண்கள்

Pollachi Sexual Assault Case Action : பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களுக்கு தடை விதித்து நடவடிக்கை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pollachi Sexual Assault Case, Pollachi Issue

Pollachi Sexual Assault Case

Pollachi Sexual Assault Case Action on Videos Ban : பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களுக்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

பொள்ளாச்சியில் அப்பாவி பெண்களுக்கு பாலியல் கொடுத்த கும்பல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக நான்கு பேர் கைதாகியுள்ளனர். பள்ளி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரும் கொடூரர்களிடம் சிக்கித் தவித்தனர். இந்த வழக்கின் விசாரணையில் ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்களும் அந்த கும்பலிடம் சிக்கியிருந்த தகவல் கிடைத்துள்ளது.

Pollachi Sexual Assault : பொள்ளாச்சி வழக்கு... கொந்தளிப்பில் தமிழகம்

இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் திருநாவுக்கரசுவை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது சிபிசிஐடி. மேலும் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.

Pollachi Case : பொள்ளாச்சி வழக்கு விவரங்கள்

2.30 PM : கோவை ஆட்சியரிடம் மாணவிகள் மனு

பொள்ளாச்சி சம்பவத்தால் அச்சமடைந்துள்ளோம் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கொடுங்கள் என கோவை கலெக்டரிடம் மாணவிகள் மனு

12.00 PM : சிபிசிஐடி போலீசார் கடிதம்

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பரவுவதை தடுக்க பேஸ்புக் மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனங்களுக்கு கோவை சிபிசிஐடி போலீசார் கடிதம்

11.00 AM : சபரிராஜன் வீட்டில் சோதனை

பாலியன் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட சபரிராஜன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்கள்

10.00 AM : நீதிபதி ஜெயசந்திரன் கருத்து

மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் ஜெயசந்திரன், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் அனைவருமே தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

9.00 AM : பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு

பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளம் வெளியிட்டதாள், 25 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

8.30 AM : திருநாவுக்கரசு விசாரணை

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்கிறது சிபிசிஐடி

Coimbatore Pollachi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment