வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும்! - பொன்.ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை

தமிழகத்திற்கு திமுக செய்த அநீதிக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார்

மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள் என மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்திற்கு மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை கிண்டல் செய்பவர்கள் துரோகிகள் கோடிக்கணக்கில் செலவு செய்து திறக்கப்படும் ஆலைகளை உடனே மூடவேண்டும் என்றால் சாத்தியமில்லை தமிழகத்தில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை ஏற்க முடியாது. வைகோ வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். ஸ்டெர்லைட் விவகாரத்தில் தன்மீது கல்வீசியது பாஜக கைக்கூலிகள் என வைகோ கூறியதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்திற்கு திமுக செய்த அநீதிக்கு ஆதரவாக வைகோ பேசி வருகிறார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

More Details Awaited…

×Close
×Close