Advertisment

pongal 2019 : தை பிறந்தால் வழி பிறக்கும்.. தமிழர் திருநாளை கொண்டாடும் பொங்கல்!

உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Pongal 2019

Pongal 2019

பொங்கல் விழா சமயங்கள் கடந்து அனேகத் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால் தை முதல் நாள் தொடங்கும் இந்த உற்சாகமும் பேரினம்பமும் ஆண்டு முழுவதும் செழித்திட இன்பாய் கொண்டாடுங்களை இந்த வருட பொங்கலை.

Advertisment

இந்த நாளன்று உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் சாதி, மதம் என்ற எந்த ஒரு வேறுபாடில்லாமல், அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. சொல்லப்போனால், அது தமிழர்களின் ஒரு தேசிய திருவிழா என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த பொங்கல் பண்டிகை உலமெங்கும் இருக்கும் தமிழர்களால் இன்றும் பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

publive-image

Pongal 2019 Festival: பொங்கல் எப்படியெல்லால் கொண்டாடலாம்!

தைப்பொங்கல்:

தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும். இந்த நாளில் விவசாயத்திற்கு பெரிதும் உதவிபுரிந்த கதிரவனை வணங்கி பூஜை செய்து, தாம் அறுவடை செய்து வந்த புத்தரிசியை பொங்கலிட்டு படைத்து, அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து மகிழ்வார்கள்.

பொங்கலோ பொங்கல்... வாழ்த்து சொல்லுங்க மகிழ்ச்சியா இருங்க

மாட்டுப் பொங்கல்:

தை மாதம் இரண்டாம் நாள் கொண்டாடப்படும் மாட்டுப் பொங்கலை, திருவள்ளுவர் நாள் என்றும் சொல்வார்கள். பொதுவாக இந்த நாளில் விவசாயம் செய்வதற்கு பெரிதும் உதவியாக இருந்த கால்நடைகளுக்கு நன்றியை செலுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பிறந்த திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம், தமிழின் பெருமையையும், தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால், இந்த நாளை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடுகின்றோம்.

தமிழர்களின் தனிப்பெரும் விழா “பொங்கல்”

publive-image

காணும் பொங்கல்:

இந்த நாள் தை மாதம் மூன்றாம் நாள் கொண்டாடப்படுகிறது. இதனை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பார்கள். இந்த நாளன்று உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கு செல்வது மற்றும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறுவது போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி இந்த நாளன்று தமிழர்களின் வீர விளையாட்டுக்கள் பலவும் நடைபெறும், முக்கியமாக இந்த நாளானது பெண்களுக்குரியது. ஏனெனில் இந்த நாளில் பெண்கள் பொங்கல் பானையில் கட்டியிருக்கும் மஞ்சள் கொத்தினை, முதிர்ந்த சுமங்கலிகள் ஐந்து பேரின் கையில் கொடுத்து வாங்கி, அதனை முகம் மற்றும் உடலில் பூசுவார்கள்.

முந்திரி வறுத்துப் போட்டு நெய் மணக்கும் வெண் பொங்கல்... செய்வது ரொம்ப ஈஸி

 

Pongal Pongal Festival
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment