பொங்கல் 2020 : அந்த ரெண்டு நாள் லீவ் இல்லையாமே! சோகத்தில் அரசு ஊழியர்கள்!

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே 9 நாட்கள் விடுமுறை.

By: Updated: January 13, 2020, 11:49:41 PM

Pongal holidays 2020 : இந்த வாரம் புதன் கிழமை (15/01/2020) அன்று தமிழகம் முழுவதும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பலரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். பொங்கல் வாரத்தின் நடுவில் வருவதால் பலருக்கும் மகிழ்ச்சி. ஏன் என்றால், பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என மூன்று நாட்கள் வெள்ளிக்கிழமையோடு நிறைவடைய, சனி மற்றும் ஞாயிறு என மொத்தமாக 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

நடிகர் ரஜினிகாந்துடன் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஷ்வரன் சந்திப்பு..

9 நாட்கள் விடுமுறை (Additional Pongal holidays)

சில அலுவலகங்களில் போகிக்கும் விடுமுறை அளிக்கின்றனர். சிலரோ சரியாக 10ம் தேதி இரவே தங்களின் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். முழுதாக பார்த்தால் மொத்தம் 9 நாட்கள் விடுமுறை. அனைவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி தான். ஆனால் சில தனியார் நிறுவனங்களில் தான் நிலைமை மோசமாக இருக்கிறது. ஏன் என்றால் அவர்களுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கட்டயமாக அலுவலகத்தில் இருக்கின்ற சூழல் உருவாகியுள்ளது. அந்த இரண்டு நாட்களும் விடுமுறை அளித்துவிட்டால் மொத்தமாக 9 நாட்கள் அலுவலக செயல்பாடுகள் முடங்கிவிடும் அபாயம் இருப்பதால் இது போன்ற நடவடிக்கைகளில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க : தமிழகத்தை விஞ்சும் வெளிநாட்டு பொங்கல் – மண் பாசத்துல நம்மள மிஞ்சிடுவாங்களோ!!

பொங்கலுக்கு சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு தமிழக அரசு செய்துள்ள ஏற்பாடுகள் என்ன? வீடியோ செய்தி கீழே

Pongal leave calendar to school and college students

அதே போன்று கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கும் இன்று (12/01/2020) வழக்கம் போல் கல்லூரிகள் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளதால் பலரும் பொங்கலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே செல்லும் வாய்ப்பை இழந்து வருத்தப்பட்டு வருகின்றனர். பொங்கலுக்கு முதல் நாள் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலை வந்தால் பேருந்து நிலையத்தில் ஒரு கொண்டாட்டத்திற்கான அத்தனை நெரிசல்களும் இருக்கும். இதனை தவிர்க்கவாவது விடுமுறை அளித்திருக்கலாம் என்று மாணவர்களும் புலம்பி வருகின்றனர்.

அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளித்த தமிழக அரசு

திங்கள் மற்றும் செவ்வாய் கிழமையன்று கூடுதல் விடுப்பினை அளித்தால் மொத்தமாக 9 நாட்கள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்று காத்திருந்த தமிழக அரசு ஊழியர்களின் ஆசை கொஞ்சம் பொய்யாகிவிட்டது என்று தான் கூற வேண்டும். தமிழக அரசு கூடுதல் விடுமுறையை அளிக்கவில்லை. அதனால் இன்றும் நாளையும் தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும்.

இது குறித்து ஆசிரியர்களிடம் கேட்ட போது, கூடுதல் விடுமுறை கிடைத்தால் அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும். இரண்டு வாரங்கள் சனிக்கிழமை வேலை பார்க்கும் நிலை வரும். அதற்கு இந்த வாரத்திலேயே இரண்டு நாட்கள் வேலைக்கு வந்துவிடுகின்றோம் என்று அறிவித்துள்ளனர். கூடுதல் விடுமுறை அளிக்காமல் போனது ஒரு வகையில் மகிழ்ச்சியே என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு மட்டுமே 9 நாட்கள் விடுமுறை. இதர அடிப்படை ஊழியர்கள் அனைவரும் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை வேலைக்கு வர வேண்டும்.

மேலும் படிக்க : சாதி சமயம் கடந்து நிற்கும் சமத்துவப் பொங்கல்… யானைக்கும் பொங்கல் படையலிடும் தமிழர்கள்!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Pongal holidays 2020 no additional pongal leaves to government staffs

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X