Advertisment

அங்கன்வாடிகளில் வேலை ; பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டுகோள்

சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 

author-image
Nithya Pandian
New Update
Prioritise STs in recruitment of Anganwadi workeers in Anamalai tiger reserve

Prioritise STs in recruitment of Anganwadi workeers in Anamalai tiger reserve :  கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டப்பள்ளி மையங்களில் அமைப்பாளர்கள் காலிப் பணியிடங்கள் மற்றும் சமையல் உதவியாளர் நிரப்பப்பட உள்ளனர். இந்த பணியிடங்களுக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. அமைப்பாளர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர் குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் என்றால் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.  வயது வரம்பு 21 வயதில் இருந்து 40 வயது வரை என்று கோவை மாநகராட்சி வெளியிட்ட குறிப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை உறுதி செய்ய வேண்டும் என்று வலுவான குரல்கள் தற்போது எழுந்துள்ளது.

Advertisment

மேலும் படிக்க : சாலைகளற்ற காடுகளில் இருந்து கனவை தேடி பறக்கும் முதல் பறவை ஸ்ரீதேவி…

கடந்த காலங்களில் பழங்குடி கிராமங்களில் அமைந்திருக்கும் பள்ளிகள் மற்றும் சத்துணவு கூடங்களில் பழங்குடியினர் இல்லாதோரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இவர்களை பழங்குடி கிராமங்களுக்கு வெளியே இருந்து உள்ளே அழைத்து வர ஒரீருவர் செல்ல வேண்டும். மீண்டும் அவரை சாலை வரை அழைத்து செல்ல வேண்டும். பல நேரங்களில் சத்துணவு மையங்களுக்கு ஆட்களே வருவது இல்லை. மேலும் பழங்குடிகளின் வாழ்வியலை புரிந்து கொள்ள முற்படுவதில்லை என்பதால் பல்வேறு முரண்கள் ஏற்படுகின்றன. அதனை கலையும் பொருட்டு மாவட்ட ஆட்சி தலைவரிடம், இந்த பணியிடங்களுக்கு பழங்குடியினப் பெண்களை நியமிக்க வேண்டும் என்று ஏக்தா பரிஷத் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை அவர்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளது ஏக்தா பரிஷத் அமைப்பு.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஆனைமலை வனப்பகுதியில் செயல்பட்டு வரும் 106 அங்கன்வாடிகளில் பணியாற்ற 225 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment