Advertisment

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் சேவை: சுற்றுலாப் பயணிகளை கவர புதிய திட்டம்

சுற்றுலாவாசிகளின் ஜில் அனுவத்தை கொஞ்சம் த்ரில் அனுபவமாக மாற்ற ஒரு ஏற்பாடு அங்கே தயாராகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Private helicopter services introduced in Kodaikanal to attract tourists

Private helicopter services introduced in Kodaikanal to attract tourists : மலைகளின் இளவரசி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் ஒரு சுற்றுலா தளாம் தான் கொடைக்கானல். சில்லென வீசும் காற்று, சுற்றிலும் பரவி விரிந்திருக்கும் காஃபி எஸ்டேட்கள், இயற்கை காட்சிகள் என்று அத்தனை அழகு. யாராலும் ஒரே நாளில் இதன் மொத்த அழகையும் ரசித்துவிட்டு நகர்ந்துவிட இயலாது. சுற்றுலாவாசிகளின் ஜில் அனுவத்தை கொஞ்சம் த்ரில் அனுபவமாக மாற்ற ஒரு ஏற்பாடு அங்கே தயாராகி வருகிறது.

Advertisment

கொடைக்கானலில் தனியார் நிறுவனம் முதன்முறையாக ஹெலிகாப்டர் சேவையை துவங்கியுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலின் எழில் கொஞ்சும் இயற்கை அழகை கண்டு ரசிக்கலாம்.

இந்த தற்காலிக ஹெலிகாப்டர் சேவை தற்போது மூன்றாம் தேதி வரை மட்டுமே நடைபெற உள்ளது. 6 நபர்கள் வரை பயணம் செய்து கொடைக்கானலின் எழிலை ரசிக்கலாம். 15 நிமிட பயணத்திற்கு ஆகும் செலவு ஒருவருக்கு ரூ. 6000 ஆகும். ஏரி, கோக்கர்ஸ்வாக், பிரையண்ட் பூங்கா ஆகிய இடங்களின் அழகை ரசித்த வண்ணமே நீங்கள் பயணிக்கலாம்.

இந்த ஹெலிகாப்டர் நிறுவனம், கோவையில் ஓய்வு பெற்ற விமானிகளால் நடத்தப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் முதன்முதலான துவங்கப்பட்ட இந்த தற்காலிக சேவையை பயன்படுத்தி அவசர கால மருத்துவ உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Kodaikanal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment