சென்னையை பொருத்தவரை 88 % மக்கள், ஆன்லைன் மூலம் சொத்து வரி செலுத்துகின்றனர். அதிகரித்து வரும் ஆன்லைன் பயன்பாட்டால் சர்வர் வேலை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரை சொத்துவரியை 88% மக்கள் ஆன்லைன் மூலம் செலுத்துகின்றனர். இந்த ஆன்லைன் செயல்முறை 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் அப்போது 2 % மட்டுமே ஆன்லைன் மூலம் சொத்து வரியை செலுத்தி வந்தனர். இந்நிலையில் இது தொடர்பான சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த 5 மாதங்களில் திறனை மேம்படுத்த, 12 ஆரகில் டேட்டாபேஸ் எண்டர்பிரைஸ் எடிஷன் சாப்டுவேர் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக அதிகாரி ஒருவர் பேசுகையில் “ 2008ம் ஆண்டு இதை அறிமுகம் செய்தபோது 2 % பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் சொத்துவரியை செலுத்தினர். தற்போது அனைவருமே ஆன்லைன் மூலம் செலுத்துவதால், சர்வர் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதலாக சரவர் மற்றும் டேட்டா பேஸ் கிடைத்தால் இந்த சிக்கல் ஏற்படாது” என்று அவர் கூறினார்.
இந்நிலையில் தற்போது சென்னை மாநகராட்சி, 89 லட்சம் மக்கள் தொகைக்கு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், சொத்துவரி உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை, இந்த ஆரல்கல் டேட்டாபேஸ் மூலம் வழங்குகிறது.
“ உலகத்தின் எந்த இடத்திலிருந்தும், சான்றிதழ்களை மக்கள் பதிவிறக்கம் செய்கின்றனர். இதனால் கூடுதல் சுமை அதிகரித்துள்ளது. செயல்பாட்டில் தொய்வு ஏற்படுகிறது. கோர் 6, பழைய வெர்ஷன் டேட்டாபேஸ்தான் தற்போது வரை பயன்பட்டில் உள்ளது.
மக்களின் தேவை அதிகரித்துள்ளதும், டேட்டா அளவு அதிகரித்திருப்பதால் கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது” என்று அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“