குடிநீர், சொத்து வரியை எப்போது செலுத்தலாம்? சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும், நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாலும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

By: Updated: April 27, 2020, 02:38:30 PM

கொரோனா வைரஸ் நோய் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு விதிமுறைகளில் அமலில் உள்ளது. பொதுமக்கள் கூடுகைக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. நிதி ஆண்டு முடிந்த நிலையில் பல்வேறு அமைப்புகளுக்கு வரிகள் செலுத்த வேண்டிய கால கட்டம் இது. ஆனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாலும், வெளியே வந்தால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாலும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது சென்னை மாநகராட்சி.

மேலும் படிக்க : சாதித்து காட்டிய வுஹான்! முற்றிலுமாக கொரோனா இல்லா நிலையை எட்டியது!

முதல்வரின் வேண்டுகோள்களுக்கு இணங்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்துவதற்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : மோசமான சூழல் நிலவும் போது இத்திட்டம் பலனளிக்குமா? இத்தாலியில் கொரோனா நிலை என்ன?

அந்த அறிவிப்பின் படி, சென்னைவாசிகள் தங்களின் சொத்து வரி மற்றும் இதர வரிகளை செலுத்த குறிப்பிட்டிருந்த கால அவகாசம் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 30ம் தேதிக்குள் முனிசிபலுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பொதுமக்கள் செலுத்திக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Property tax water tax deadline extended till 30th of june in tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X