Advertisment

10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வு இயக்குனர் இன்று வெளியிட்டுள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10,11,12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வு இயக்குனர் இன்று வெளியிட்டுள்ளார்.

Advertisment

நடைபெறவிருக்கும் மார்ச் - ஏப்ரல் 2018, இடைநிலை \ மேல்நிலை முதலாம் ஆண்டு \ மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசுந்தரா தேவி இன்று வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 12ம் வகுப்புக்கு மார்ச் 1ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 6ம் தேதி வரையும், 11ம் வகுப்புக்கு மார்ச் 7ல் தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரையும், 10ம் வகுப்புக்கு மார்ச் 16ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, மதியம் 1.15 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment