ராகுல் காந்தி மற்றும் பிற மாநில முதல்வர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்கத் தவறிய தமிழக அரசு - நாராயணசாமி வருத்தம்

கலைஞருக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி உருக்கம்

நாராயணசாமி கருத்து :  மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இறுதி அஞ்சலியில் கலந்துகொள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கடந்த 8ம் தேதி தமிழகம் விரைந்தனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டு கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

எஸ்.பி.ஜி பாதுகாப்பு குறித்து நாராயணசாமி

எஸ்.பி.ஜி பாதுகாப்பு எனப்படும் Special Protection Group பாதுகாப்பினை இந்தியாவில் பிரதமர், முன்னாள் பிரதமர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு தருவது வழக்கம். ராகுல் காந்திக்கும் அப்படியான பாதுகாப்பினை அவர் செல்லும் இடங்களுக்கு தருவது வழக்கம்.

ஆனால் இம்முறை அவர் தமிழகம் வந்த போது அவருக்கு முறையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என தமிழக அரசின் மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு குறித்து நாராயணசாமி கருத்து

நேற்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நாராயணசாமி ”பிரதமருக்கு அளித்த அதே பாதுகாப்பினை ஏன் ராகுல் காந்திக்கும் மற்ற மாநிலத்தில் இருந்து வந்த முதல் அமைச்சர்களுக்கும் தரவில்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமருக்கு மட்டும் சிறந்த முறையில் பாதுகாப்பினை அளித்துவிட்டு மற்றவர்களுக்கான பாதுகாப்பினை உறுதி செய்ய மறந்துவிட்டது மாநில அரசு என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு குறைபாட்டின் காரணமாக அஞ்சலி செலுத்த வந்தவர்கள் பெரும் அளவில் பாதிப்பினை சந்தித்துள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து விளக்கம் அளித்த தமிழக காவல்துறை பற்றிய செய்தியினை படிக்க

பாரத ரத்னா

கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய அவர் மேலும் இந்தியாவில் நிறைய தலைவர்களும் பிரதமர்களும் உருவாவதிற்கு காரணமாக இருந்தவர் என்பதால் மத்திய அரசு பாரத ரத்னா விருதை கலைஞருக்கு அளிப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close