வைரல் வீடியோ : காவல் துறையினரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிய ரவுடி பிடிபட்டார்..

காவல்துறையினரை தாக்கிய இருவரும் பின்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

By: Updated: October 1, 2019, 08:05:33 PM

Puducherry hooligans Joseph Raj Rose Ayyanar attacked policemen Viral Video : புதுவை மாநிலத்தை சேர்ந்த காவல்துறை அதிகாரிகளை தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் தாக்கியது பெரும் அதிர்ச்சி சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது.  புதுச்சேரியில் அமைந்திருக்கிறது கரிகலாம்பாக்கம் என்ற பகுதி. அங்கு நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த காவலர்கள் மைக்கேல் மற்றும் சிவகுரு. அப்போது அந்த பகுதியில், ஏற்கனவே போலீஸாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் இருவர் ஜோசப் ராஜ் மற்றும் ரோஸ் அய்யனார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவ்விருவரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர்.

Puducherry hooligans Joseph Raj Rose Ayyanar attacked policemen Viral Video

சிதம்பரம் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியர்களை கத்தியால் தாக்கி பணத்தைப் பறித்தவர் தான் இந்த ஜோசப் ராஜ். இந்த வழக்கில் தற்போது வெளியே வந்த அவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் காவலர்களை அந்த குற்றவாளிகள் இருவரும் தாக்கினர். பதில் தாக்குதல் நடத்தினார்கள் காவலர்கள். கலகம் முற்றும் போது இரு தரப்பினரும் நடுசாலையில் கட்டிப் புரண்டு கொண்டிருந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. காவல்துறையினரை தாக்கிய இருவரும் பின்பு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கிருந்து சென்ற காவல்துறையினர், ரோஸ் அய்யனார் மற்றும் ஜோசப் ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க : ஓடும் பஸ்ஸில் கண்டக்டரை தாக்கிய போலீஸார்: காரசார மோதல் வீடியோ உள்ளே!

காவலர்களை தாக்கிய குற்றவாளிகளை வில்லியனூர் போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் தேடி வந்தனர். குற்றவாளிகளில் ஜோசப் கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து அங்கு சென்றனர். அப்போது கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டனர். அவன் போலீசார் வருவதை கண்ட உடன் தப்பித்து ஓடினான். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க மயற்சித்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து இடது கை முறிந்துபோனது. உடனே போலீசார் அவனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Puducherry hooligans joseph raj rose ayyanar attacked policemen viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X