மத்திய அரசு சார்பில் இந்திய அஞ்சல் துறை மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செல்வ மகள் சேமிப்புத் திட்ட கணக்கு புத்தகங்களை ஒப்படைக்கும் விழா, புதுச்சேரி தலைமை அஞ்சல் நிலையம் சார்பில் அக்கார்டு ஓட்டலில் நடைபெற்றது.
துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பெண் குழந்தைகளுக்கு கணக்கு புத்தகங்கள் வழங்கி நிகழ்ச்சியினைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் தமிழிசை பேசியதாவது, மத்திய அரசும் புதுச்சேரி மாநில அரசும் பெண் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் ஏற்படுத்தி தருகின்றன. தொலைநோக்குப் பார்வையோடு 2015 ஆம் ஆண்டு பாரதப் பிரதமர் கொண்டு வந்ந இந்த செல்வமகள் சேமிப்புத் திட்டம் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது. சுமார் 60 லட்சம் பெண்கள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள்.



மேலும், பெண்களுக்கான மகிளா சம்மன் சேமிப்புத் சான்றிதழ் திட்டம் 2023 இல் மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு இரண்டு லட்சம் முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்பவரகளுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது.
அதேபோல, கைவினைக் கலைஞர்கள், சிறு-குறு ஏற்றுமதியாளர்கள் பயன்பெறும் வகையில் அஞ்சலகம் மூலமாக ஏற்றுமதி திட்டத்தை கொண்டு வந்த பாரத பிரதமருக்கும் அஞ்சல் துறைக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்பு காலத்தில், உறவுகளுக்கு இடையிலான பாலமாக அஞ்சல்துறை இருந்தது. இன்றைய சூழ்நிலையில் அஞ்சல் துறையை எப்படி பயன்படுத்துவது, மேம்படுத்துவது என்ற விதத்தில் பாரதப் பிரதமர் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததில் நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும்.
செய்தி: பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“