Advertisment

ரயில் கட்டணம் உயர்வு... சொந்த ஊருக்கு செல்ல கூடுதலாக எவ்வளவு செலவாகும்?

ராஜ்தானி, சதாப்தி, டொரொண்டோ, வந்தே பாரத், தேஜஸ், ஹம்ஸஃபர், கதிமான் மற்றும் கரிப் ராத் ஆகிய தொலைத்தூர ரயில் போக்குவரத்துகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இன்றைய செய்திகள்: ஊரடங்கு உத்தரவு - மார்ச்.22 ரயில் சேவைகளில் மாற்றம், பயணிகள் ரயில் இயங்காது

Railway fare hike effective today : இந்திய ரயில்வே வாரியம் நேற்று, பேஸஞ்சர்களுக்கான ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி அறிவித்தது. அதன்படி, ஏ.சி. இல்லாத, சாதாரண இருக்கை மற்றும் ஸ்லீப்பர் கோச்சில் பயணிப்பதற்கு முறையே ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசா உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது (செகண்ட் க்ளாஸ், ஸ்லீப்பர் க்ளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்) . மெயில் மற்றும் எக்ஸ்பிரஸின் ஏ.சி. இல்லாத கோச்சில் (செகண்ட் க்ளாஸ், ஸ்லீப்பர் க்ளாஸ் மற்றும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்) பயணம் செய்வதற்கு ஒரு கிலோ மீட்டருக்கு முறையே 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி கோச்களுக்கு முறையே 4 பைசாக்கள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. லோக்கல் ட்ரெய்ன்கள் மற்றும் சீசன் டிக்கெட்களின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் அது அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ராஜ்தானி, சதாப்தி, டொரொண்டோ, வந்தே பாரத், தேஜஸ், ஹம்ஸஃபர், கதிமான் மற்றும் கரிப் ராத் ஆகிய தொலைத்தூர ரயில் போக்குவரத்துகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். கடைசியாக 2014-2015 ஆண்டுகளில் தான் ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டது.  அதே நேரத்தில் அதற்கடுத்த கால கட்டங்களில் இந்திய ரயில்வேயில் மிகப்பெரிய மாற்றங்கள் உருவானது. மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவகையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது.

சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு ஏற்றப்பட்ட கூடுதல் கட்டணம் எவ்வளவு?

Chennai to Coimbatore

சென்னையில் இருந்து கோவைக்கு இடையே 500 கி.மீ இடைவெளி உள்ளது. சாதரண கோச்சில் செல்லும் போது ஒரு 1 பைசா விகிதம் என்று கொண்டால் ரூ. 5 அதிகரிக்கும், மெயில் அல்லது எக்ஸ்பிரஸ்லில் ஏ.சி. இல்லாத இதர கோச்சில் பயணிக்கும் போது ரூ. 10 அதிகரிக்கும். ஏ.சி. கோச்சில் செல்லும் போது கட்டணங்கள் முறையே ரூ. 20 அதிகரிக்கும்.

Chennai to Trichy

சென்னையில் இருந்து திருச்சிக்கு இடையே 332 கி.மீ இடைவெளி உள்ளது. சாதரண கோச்சில் செல்லும் போது ஒரு 1 பைசா விகிதம் என்று கொண்டால் 3 ரூபாய் 30 காசுகள் வரை அதிகரிக்கும், மெயில் அல்லது எக்ஸ்பிரஸ்லில் ஏ.சி. இல்லாத இதர கோச்சில் பயணிக்கும் போது ரூ. 6 முதல் ரூ. 8 வரை அதிகரிக்கும். ஏ.சி. கோச்சில் செல்லும் போது கட்டணங்கள் முறையே ரூ. 12 முதல் 16 அதிகரிக்கும்.

Chennai to Madurai

சென்னையில் இருந்து மதுரைக்கு இடையே 462 கி.மீ தொலைவு உள்ளது. ஒரு கிலோ மீட்டருக்கு கணக்கிட்டால் சாதாரண கோச்சில் 4 ரூபாய் 60 காசுகள் வரை உயரும். மெயில் மற்றும் எக்ஸ்பிரஸில் உள்ள சாதாரண கோச்சில் பயணம் செய்ய ரூ.9 வரையும், ஏசி கோச்சில் பயணம் செய்ய ரூ. 18 முதல் ரூ. 20 வரை அதிகரிக்கும்.

Chennai to Nellai

சென்னையில் இருந்து நெல்லை 624 கி.மீ தொலைவில் உள்ளது. சாதாரண ரயிலில், சாதாரண கோச்சில் பயணம் செய்ய 6 ரூபாய் 20 காசுகள் வரை கட்டணம் உயர்வு இருக்கும். மெயில் அல்லது எக்ஸ்பிரஸில் பயணிக்க ரூ.12 முதல் 13 வரை கட்டண உயர்வு இருக்கும். ஏசி கோச்சில் பயணிக்க ரூ. 25 வரை அதிகமாகும்.

Chennai to Bengaluru

சென்னை மற்றும் பெங்களூருக்கு இடையே உள்ள தூரம் 347 கிலோ மீட்டர். சாதாரண ரயிலில், சாதாரண கோச்சில் பயணிக்க 3 ரூபாய் 40 காசுகள் வரை உயரும். மெயில் அல்லது எக்ஸ்பிரஸில் உள்ள கோச்சில் பயணிக்க 6 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை அதிகரிக்கும். ஏ.சி. கோச்சில் பயணம் செய்ய ரூ. 12 முதல் ரூ. 14 வரை அதிகரிக்கும்.

மேலும் படிக்க : ரயில் கட்டணங்களும் உயருகிறது… ரயில்வே வாரிய சேர்மன் கொடுத்த புது தகவல்!

Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment