”ரஜினி, கமல் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். ஆபரேஷன் திராவிடத்தில் அவர்கள் இல்லை” : நடிகர் சிவாஜி!

பாஜக வுடன் சேராமல் சுயமாக அரசியல் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

தெலுங்கு நடிகர் சிவாஜி  பிரபல நாளிதழ் ஒன்றிற்கு ’ஆபரேஷன் திராவிடம்’ குறித்து அளித்துள்ள பேட்டி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு,  தெலுங்கு நடிகர் சிவாஜி ’ஆபரேஷன் திராவிடம்’ என்ற பெயரில்,  பாஜக  கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற ஒரு மிகப்பெரிய மாஸ்டர் ப்ளானை தீட்டியுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்சை முன்வைத்தார். தென்மாநிலங்களில்  ரூ.4,800 கோடி செலவில்  ஆபரேஷன் திராவிடம் என்ற திட்டத்தை செயல்படுத்தி இங்குள்ள கட்சிகளை பிளவுப்படுத்துதல், புதியவர்களை அரசியலில் களமிறக்குதல், கட்சி துவங்க வைத்தல் போன்ற திட்டங்களை கூடிய விரைவில் பாஜக அரசு முன்னெடுக்கவுள்ளது சிவாஜி தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இதுக் குறித்து 20 நிமிடம் அவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது.  இதில் சிவாஜி பாஜக கட்சி என்று நேரடியாக குறிப்பிடாமல் தேசியக் கட்சி ஒன்று திட்டம் தீட்டியுள்ளது என்றார்.

ஆனால், அனைவருக்கும் தேசிய கட்சி என்று சிவாஜி குறிப்பிடுவது பாரதிய ஜனதா கட்சித் தான் என்று எளிதாக புரிந்தது. மேலும், அந்த வீடியோவில் தென் மாநிலங்களை வகை பிரித்துபெயரிட்டுள்ளனர். அதாவது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்ள உள்ள பணிகளுக்கு ’ஆபரேஷன் கருடா’ என்றும், தமிழகம் மற்றும் கேரளாவில் காலூன்ற மேற்கொள்ள திட்டமிட்டுள்ள பணிகளுக்கு  ’ஆப்ரேஷன் ராவணா’ என்றும் கர்நாடகாவிற்கு ’ஆபரேஷன் குமாரா’ என்றும் பெயர் வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் தலைவர்கள் உட்பட பலருக்கும் இந்த தகவல் பேரதிர்ச்சியை தந்தது. இந்நிலையில், பிரபல நாளிதழ் ஒன்று , அவரை பேட்டி கண்டது. அதில்.  ’ஆபரேஷன் திராவிடம்’  குறித்து அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.  அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி:ஆபரேஷன் திராவிடம் திட்டத்தை  ரஜினி கமலால் எதிர்க் கொள்ள முடியுமா?

பதில்: முதலில் அரசியலில் சாதிக்க பல்வேறு முயற்சிகளை எடுக்க வேண்டும். மக்களை நேரில் சந்திக்க வேண்டும். மக்கள் எந்தெந்த பிரச்சனைகளை பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர் ? என்பதை நேரில் சென்று தெரிந்துக் கொள்ள வேண்டும். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு,  பிரச்சினைகளை நேரில் சென்று அறிந்து கொள்வது மிக அவசியம்.  எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்றோர் இதைத்தான் செய்து அரசியலில் சாதிக்த்தார்கள்.

கேள்வி: ரஜினிக்கு பின்னால் பாஜக உள்ளது என சிலர் நினைக்கிறார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன ?

பதில்:  கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என கூற முடியுமா?  ரஜினி ஒரு ஆன்மிகவாதி. இதை வைத்து, அவர்  பாஜகவை சேர்ந்தவர் எனவோ நினைக்க கூடாது. இவரை பாஜக இயக்க வேண்டிய அவசியம் இல்லை. ரஜினி மக்கள் செல்வாக்கு மிக்கவர். இவர் பாஜக வுடன் சேராமல் சுயமாக அரசியல் களத்தில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

கேள்வி: ஆபரேஷன் திராவிடம் திட்டத்தில் இருப்பவர்கள் யார்? 

பதில்: கமல், ரஜினி போன்றோர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தனர். இதனால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  2ஜி வழக்கில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களுக்கு சாதகமான தீர்ப்பு வருகிறது. ஆனால், எனக்கு தெரிந்தவரை, நடிகர்கள், கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகி யோர் இந்த ‘ஆபரேஷன் ராவணா’ வில் இல்லை.

 

 

 

 

×Close
×Close