ரஜினி அரசியல் பற்றிய சவாலில் தோல்வி: ஜோதிடம் பார்ப்பதை நிறுத்துவாரா ஷெல்வி?

ரஜினியின் அரசியல் கட்சி குறித்து ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு தவறானதை தொடர்ந்து அவர் கூறியபடி ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என்பது குறித்து சமூக வலைதளங்களில் பெரும் கேள்வி எழுந்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் ரஜினிகாந்த் நிச்சயம் கட்சி தொடங்குவார். அப்படி தொடங்கவில்லை என்றால் தான் ஜோதிட தொழிலை விட்டுவிடுவதாக ஜோதிடர் ஷெல்வி அறிவித்திருந்தார். ஆனால் அவரது கணிப்பு தற்போது பொய்யகியுள்ள நிலையில், அவர் ஜோதிட தொழிலை கைவிடுவாரா என்பது குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி கட்சி தொடங்குவார் என முதன்முதலில் கணித்த இவர், இந்த ஆண்டு டிசம்பரில் ரஜினி கட்சி தொடங்குவார். அப்படி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்தார். அவரது கணிப்பு படியே பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு டிசம்பர் இறுதியில் கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இதனால் ஷெல்வியின் கணிப்பு உண்மையாகியுள்ளது என அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

மேலும் கட்சி தொடங்கும் பணிகளில் தீவிரம் காட்டிய ரஜினி, தான் நடித்துவரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை விரைந்து முடிக்க தீவிரமாக நடித்து வந்தார். அதன்பிறகு ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக மருத்துவமனைியில் சிகிச்சை பெற்று வந்த ரஜினி கடந்த வாரம் வீடு திரும்பினார். அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் திடீர் அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த் தான் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை. அனைவரும் என்னை மன்னித்துவிடுங்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டு பெரும்பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால் ஜோதிடர் ஷெல்வியின் கணிப்பு பொய்யாகி உள்ளதாக விமர்சித்து வரும் நெட்டிசன்கள் அவர் சொன்னது போலவே ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என கணித்த ஷெல்வி, 2020-ம் ஆண்டு அனைவருக்கும் சிறப்பானதாக அமையும் எனவும் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்த கணிப்புகள் அனைத்தும் பொய்யாகியுள்ளதை தொடர்ந்து அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஜோதிட தொழிலை விட்டுவிடுவாரா என சமூக வலைதளங்களில் பலர் விமர்சனங்களையும் கேள்விகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Rajini political entryprediction fail astrologer shelvi will leave astrology

Next Story
சன் டிவியில் அதிமுக விளம்பரம்.. திமுக எம்பி எதிர்ப்பு ! டுவிட்டரில் கடும் விவாதம்sun tv sun network admk election ads
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com