Advertisment

ஹாய் கைய்ஸ்: சும்மா முள்ளுங்க குத்திச்சு - அதுக்கு இந்த அக்கப்போரா.....

Rajinikanth in Man vs Wild : ஹாய் பிரெண்ட்ஸ், நல்லபடியா இன்றைய தினத்தை ஆரம்பிச்சிட்டீங்களா, வாங்க அதே ஜோரோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..

author-image
kumaranbabu tk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth, man vs wild, bandipur forest, bear grylls, tomato plant, israel, agriculture, road accident, chennai, transport

rajinikanth, man vs wild, bandipur forest, bear grylls, tomato plant, israel, agriculture, road accident, chennai, transport

வணக்கம் வந்தனம் சுஸ்வாகதம் நமஸ்கார்

Advertisment

ஹாய் பிரெண்ட்ஸ், நல்லபடியா இன்றைய தினத்தை ஆரம்பிச்சிட்டீங்களா, வாங்க அதே ஜோரோட இன்றைய நிகழ்ச்சிக்கு போயிருவோம்..

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

ராமநாதபுரம் மாவட்டம், நெல்மடூரில் தக்காளிச்செடி ஒன்று, மரம் போல வளர்ந்து காய்த்து உள்ளது. பொதுவாக, 2 அடி வரை மட்டுமே தக்காளிச் செடிகள் வளரும். இந்த வகை செடிகள், ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கின்றன. இங்கு வளர்ந்துள்ள செடி, கலப்பினமாக இருக்கலாம் என்று தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவிச்சிருக்காங்க...

கலப்பு நல்லதா கெட்டதா...

இஸ்ரேலில், விவசாயத்தில் அதிநவீன முறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தண்ணீர் விரயத்தை தவிர்க்க, சொட்டு நீர் பாசனத்துடன், ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் மருந்து தெளிப்பது, நீர் தெளிப்பது என அசத்துகின்றனர்.பயிர்களுக்கு தேவைப்படும் நீரை அறிய, 'தெர்மல் இமேஜிங்' என்ற தொழில்நுட்பத்தை பின்பற்றி, தேவைப்படும் நேரங்களில் மட்டும் நீர் பாய்ச்சுகின்றனர். அதுவும், ஒரு சொட்டுநீர் கூட, வீணாகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

புரிஞ்சிக்கோங்க விவசாய பெருமக்களே...

ஹாய் கைய்ஸ்: வங்கிகளுக்கு தொடர்ந்து 3 நாள் லீவு - சம்பள நாளா பார்த்து ஸ்டிரைக் வைக்குறாங்க

Hi guys : பத்தாவது மாசத்துல பொறக்குது கட்சி?....காத்திருப்போம்

ரஜினி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்: 'மேன் வெர்சஸ் வைல்ட்' என்ற ஷோவுக்கான சூட்டிங் முடித்து திரும்பி வருகிறேன். எனக்கு ஏதோ பெரிய காயம் ஏற்பட்டதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இதுபோல் எதுவும் இல்லை. சும்மா முள்ளுங்க லேசாக குத்திச்சு அவ்வளவுதான், வேறு பெரிய காயம் ஏதுமில்லை என சிரித்தபடி கூறி விட்டு சென்றார் ரஜினி.

ஒரு முள்ளுவுக்கு ஒரு முட்டல் மோதலா....

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ளது போல், தமிழகத்திலும், பி.ஆர்.டி.எஸ்., எனும், விரைவான அரசு போக்குவரத்து அமைப்பை உருவாக்கி, அதன் கீழ், போக்குவரத்து அதிகமுள்ள, பிரதான சாலைகளில் பிரத்யேக, 'பஸ் காரிடர்களை' உருவாக்க வேண்டும்.இந்த பஸ் காரிடர்கள் உருவாக்கப்பட்டால், அதனுள், வேறு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. அப்போது, மக்கள் தனிநபர் போக்குவரத்து சாதனங்களை தவிர்த்து, அரசு பஸ்களை அதிகம் பயன்படுத்தி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு வேகமாகவும், பாதுகாப்பாகவும் செல்வர். இதனால், விபத்துகள் முற்றிலும் தடுக்கப்படும்.

வரவேற்கத்தக்க முயற்சி..

ஓகே பிரெண்ட்ஸ், மீண்டும் இன்னொரு நிகழ்ச்சியில சந்திப்போம். Bye

Rajinikanth Israel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment