முதல்வர் பழனிசாமியை சந்தித்த ரஜினிகாந்த்! மகள் திருமணத்திற்கு அழைப்பு

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்தி இன்று நேரில் சென்றார்

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் நாளை(ஜன.11) திருமணம் நடைபெற உள்ளது. திருமண விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக ரஜினிகாந்த் திருமண பத்திரிகைகள் கொடுத்து அழைப்பு விடுத்து வருகிறார்.

அவ்வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலரது வீட்டிற்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அழைப்பிதழ் வழங்கி வருகிறார்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் சவுந்தர்யா மற்றும் விசாகன் நிச்சயர்தார்த்த விழா நடைபெற்றது. அந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு நடிகர் ரஜினிகாந்தி இன்று நேரில் சென்றார்.

அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கி திருமணத்தில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மகள் திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக முதல்வர் உறுதி அளித்ததாகக் கூறினார்.


Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close