பாஜக ஆபத்தான கட்சியா? ரஜினிகாந்த் கருத்து

Rajinikanth's Comments on BJP: ரஜினிகாந்த்: பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்தியதில் தவறு இருந்தது; அது விரிவாக பேச வேண்டிய விஷயம்

Rajinikanth Comments on BJP: ரஜினிகாந்த் சென்னையில் அளித்த பேட்டியில் பாஜக குறித்தும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்தும் கருத்து தெரிவித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த யார் அந்த 7 பேர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தருமபுரி மாவட்டம் அரூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 17-வயது பள்ளி மாணவி, கடந்த 5-ஆம் தேதியன்று இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

Rajinikanth Says BJP Is Dangerous: பாரதிய ஜனதா குறித்து ரஜினிகாந்த் கருத்து

அதேபோல், சில நாட்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டார். தமிழகத்தில் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கடும் சட்டம் இயற்றுவது அவசியம்” என தெரிவித்துள்ளார். மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

இதோ ரஜினிகாந்திடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்…

1. கேள்வி: பாஜகவை எதிர்த்து மிகப்பெரிய கூட்டணி உருவாக்க நினைக்கிறார்கள். பாஜக அவ்வளவு ஆபத்தான கட்சியா?

ரஜினிகாந்த்: பாஜக ஆபத்தான கட்சி என எதிர்க்கட்சியினர் நினைக்கிறார்கள்; அப்போது கண்டிப்பாக அப்படித்தானே இருக்க முடியும்

2. கேள்வி: பணமதிப்பிழப்பு கொண்டு வந்து 2 ஆண்டுகள் ஆகிறது ; உங்கள் கருத்து?

ரஜினிகாந்த்: பண மதிப்பிழப்பை நடைமுறைப்படுத்தியதில் தவறு இருந்தது; அது விரிவாக பேச வேண்டிய விஷயம்

3. 7 பேர் விடுதலை குறித்து உங்கள் கருத்து?

ரஜினிகாந்த்: யார் அந்த 7 பேர்கள்?….செய்தியாளர்கள் விளக்கினர்.

ரஜினிகாந்த்: 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன். ட்ராவிலிங்கிள் இருந்தேன். இன்னொருமுறை அதுபற்றி கருத்து கூறுகிறேன். என்று தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close