ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் மனதில்அவர் தான் இருக்கிறார். அரசியலை தெரியாமல் பேசக்கூடாது பெரிய அளவில் எதிர்பார்த்த ரஜினிகாந்த் ஜீரோவாகி விட்டார் ஏன நேற்று இரவு புதுச்சேரிக்கு வருகை தந்த ஆந்திரா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா தெரிவித்தார்.
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோயில் சங்கராபரணி ஆற்றில் ஆதி புஷ்கரணி விழா கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாளை மறுதினம் (3ம் தேதி) வரை இவ்விழா நடக்கிறது. நேற்று, மாலை நடந்த நிகழ்ச்சியில், நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜா பங்கேற்றார். சங்கரா பரணி ஆற்றங்கரையில் நடைபெற்ற கங்கா ஆரத்தி நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர். செல்வம், அமைச்சர்கள் தேனீ.ஜெயக்குமார், சந்திர பிரியங்கா மற்றும் தமிழக, புதுச்சேரி பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ரோஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
12 ஆண்டுக்கு ஒருமுறை வரும் கங்கா ஆரத்தியை இங்கு சந்தோஷமாக பார்க்க முடிந்தது. காசியில்தான் பார்த்துள்ளோம்.ஆனால் புதுச்சேரியில் இப்போது முதல் முறையாக பார்க்கிறேன் அரசியல் பேசக்கூடாது. என்.டி.ராமாராவை எல்லோரும் கடவுளாக பார்ப்பார்கள். அவரை எப்படி கொன்றார்கள்? அவரது மரணத்திற்கு காரணம் யார்? என்பது ரஜினி காந்துக்கு தெரியும். நான் நினைத்தேன், ரஜினிகாந்த் தெரியாமல் தவறாக பேசி விட்டார் என்று. ஆனால் தெரிந்தே தவறாக பேசியுள்ளார் என்பது தான் கஷ்டமாக இருக்கிறது.அரசியலுக்கு வர வேண்டும் என்ற விருப்பம் இல்லாதபோது, தெலுங்கு மாநில அரசியல் குறித்து எதுவும் தெரியாமல் பேசக் கூடாது. சந்திரபாபு நாயுடு வீட்டுக்கு அழைத்தார், சாப்பாடு போட்டார், ஒரு ஸ்கிரிப்டை கொடுத்தார். சாப்பிட்டுவிட்டு அவர் கொடுத்த ஸ்கிரிப்டை படித்துவிட்டு சொல்வது என்பது சரியல்ல. வந்துவிடுவது நல்லது. இவ்வளவு நாட்களாக வாங்கிய நல்லபெயர் அனைத்தும் அவருக்கு சரிந்து வருகிறது.அதனை தெரிந்து கொண்டு அறிக்கை ஒன்றை அளித்தால், அவருக்கு நல்லது.
ஜெகன்மோகன் ரெட்டியை தோற்கடிக்க சந்திரபாபு நாயுடு, முதலில் பவன்கல்யானை பயன்படுத்தினார். அவரால் ஒன்றும்முடியவில்லை. இப்போது ரஜினிகாந்தை இழுக்கப்பார்க்கிறார். அதனை ரஜினிகாந்த் தெரிந்து கொண்டால்நல்லது. யார் சேர்ந்து வந்தாலும், தனித்தனியே வந்தாலும் ஜெகன்மோகன் ரெட்டியை ஒன்றும் செய்ய முடியாது. மக்கள் மனதில் அவர் தான் இருக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“