Advertisment

நளினி பரோல் கோரிய வழக்கு : ஜூலை 5ம் தேதி ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினியை ஜூலை 5 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rajiv Gandhi assassination case convict comes out for parole, Rajiv Gandhi assassination case convict Nalini Parole

rTamil Nadu today news live updates

ஆறு மாதம் பரோல் கோரிய மனுவின் விசாரணைக்கு ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி நளினியை ஜூலை 5 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக 6 மாத கால பரோல் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த 28 ஆண்டுகளாக தான் சிறைவாசம் அனுபவித்து வரும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயுள் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு மாத பரோல் கூட தனக்கு வழங்கப்படவில்லை எனவும், தன்னுடைய மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட 2000 ஆம் ஆண்டுக்கு பின்னர் 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3700 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டி காட்டியுள்ளார்.

20 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த ஆயுள் கைதிகளை விடுவிக்க வழி வகை செய்யும் வகையில் 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட , ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்யும் சட்டத்தின் படி தன்னை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் கோரியுள்ளதை மனுவில் சுட்டிக்காட்டியுள்ள அவர், தான் உட்பட ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறை வாசம் அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க கோரி, தமிழக அரசு ஆளுநரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பரிந்துரைத்தும் இன்னும் அதன் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தன் தாத்தா, பாட்டியுடன் லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளதால் தனக்கு ஆறு மாதம் பரோல் வழங்க வேண்டுமென வேலூர் சிறைத்துறை டிஐஜி யிடம் தான் அளித்த மனு நிலுவையில் உள்ளதாகவும்,

அதேபோல தன் தாய் பத்மாவதியும் இதே கோரிக்கையுடன் மனு ஒன்றை அளித்துள்ளதாகவும் இரண்டு மனுக்கள் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள அவர், நீதிமன்றம் இதில் தலையிட்டு தனக்கு ஆறுமாத பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட விரும்புவதால் தன்னை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறைத்துறைக்கும் உத்தரவிடுமாறும் அவர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எம். நிர்மல்குமார் அமர்வில் நிலுவையில் உள்ளது.

கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக வழக்கு விசாரணையின் போது நளினியை நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும் காணொலி காட்சி மூலமாக ஆஜர் படுத்த தயாராக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கபட்டது.

இதனையடுத்து நீதிபதிகள் காணொலி காட்சி மூலம் ஆஜராக மனுதரார் நளினிக்கு விருப்பமா? என்பது தொடர்பாக அவரின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேலூர் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வேலூர் பெண்கள் சிறை கண்காணிப்பாளர் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. அதில் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராக விருப்பம் இல்லை எனவும், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நளினி விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கபட்டது.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வு, மனுதரார் நளினியை ஜூலை 5 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும், அவரை ஆஜர்படுத்த அழைத்து வரும் போது அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும், காவல்துறை செய்து தரவேண்டும் என உத்தரவிட்டு விசாரணை ஜூலை 5 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Chennai High Court Rajiv Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment