7 பேர் விடுதலை எப்போது ? 27ம் தேதி வழக்கை தள்ளிவைத்த உயர் நீதிமன்றம்!

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Rajiv Gandhi Assassination : Nalini Petition ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய மனு மீதான விசாரணை வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உயர்நீதிமன்றம். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜீவ் கொலை குற்றவாளி நளினி சார்பில் தாக்கல் செய்த மனுவில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சுமார் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருவதாகவும், 1994 ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணையின்படி 20 ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் தண்டனை கைதிகளை முன் கூட்டியே விடுதலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் தங்களுக்கு அது போன்ற எந்தவிதமான சலுகையும் காட்டப்படவில்லை.  இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி தமிழக அமைச்சரவை, தமிழக ஆளுநருக்கு ஒரு பரிந்துரை அளித்து இருந்தது அதன் அடிப்படையில் நான் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சிறையில் உள்ள மீதமுள்ள 6 பேர் உட்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

27ம் தேதிக்கு விசாரணை ஒத்தி வைப்பு

இந்த பரிந்துரை கடிதம் தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது ஆனால் ஆளுநருக்கு இந்த கடிதம் கிடைக்கப் பெற்று ஆறு மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அவர் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை அதனை அமல்படுத்தபடவில்லை.

இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறி தமிழக உள்துறை செயலாளருக்கு கடந்த பிப்ரவரி 13-ம் தேதியும், முதலமைச்சர்க்கு பிப்ரவரி 23ஆம் தேதியிம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எங்களை மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக விடுதலை செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு மீதான விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க : மகளின் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்கும் நளினி…

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close