'புரட்சித் தலைவர்' எம்.ஜி.ஆர் சிலையை திறந்து வைத்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்

சென்னை பூந்தமல்லி வேலப்பன் சாவடியில் அமைந்திருக்கும் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், எம்.ஜி.ஆர் சிலை திறப்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்திராக பங்கேற்றுள்ளார். எம்.ஜி.ஆரின் சிலையையும் ரஜினிகாந்த் திறக்கிறார். குறிப்பாக, ஒரு தனியார் விழாவில் ரஜினி பங்கேற்றிருக்கும் நிலையில், அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் விழாவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அரசியல் அறிவிப்பிற்கு பிறகு ரஜினிகாந்த் பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு 07.40 – நடிகர் ரஜினிகாந்த், இலங்கை கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன், மொரிஷியஸ் குடியரசு துணைத் தலைவர் ஆகியோருக்கு எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சியில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது

இரவு 07.30 – விழாவில் பேசிய புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.ஷண்முகம், “ரஜினி எப்போதோ அரசியலுக்கு வந்திருக்க வேண்டியவர். இப்போது அரசியலுக்கு வந்துள்ளார். எம்.ஜி.ஆர். சிலையை ரஜினிகாந்த் தவிர வேறு யார் திறந்தாலும் இவ்வளவு மரியாதை கிடைத்திருக்காது” என்றார்.

இரவு 07.00 – திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் அறிவிக்க உள்ளார் – ரஜினி மக்கள் மன்ற கன்னியாகுமரி மாவட்ட இளைஞரணி நிர்வாகி சதீஷ்

மாலை 06.12 – ரஜினிகாந்த் குத்துவிளக்கு ஏற்றினார். இதன்பின் வெண்ணிற ஆடை நிர்மலா, கஸ்தூரி ஆகியோரும் விளக்கு ஏற்றினர். பிரபல வானொலி தொகுப்பாளர் ஷாகுல் ஹமீது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

மாலை 06.09 – தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

மாலை 05.45 – எம்.ஜி.ஆர் போன்றே இருக்கும் எம்.ஜி.ஆரின் வெண்கல சிலையை திறந்து வைத்தார் ரஜினிகாந்த். இந்த சிலை திறப்பு விழாவில் பிரபு, விஜயகுமார், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சரோஜாதேவி என பல திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

 

மாலை 05.30 – விழாவில் மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் உரையாற்ற இருக்கிறார்.

மாலை 05.20 – விழா அரங்கிற்கு ரஜினிகாந்த் வந்தடைந்தார்.

மாலை 05.10 – தனது திறந்தவெளி காரில் நின்றவாறு, ரஜினிகாந்த் கையசைத்துக் கொண்டே விழாவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறார். வழியெங்கும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நின்று ரஜினியை வரவேற்றனர்.

More Details Awaited…..

 

×Close
×Close