Advertisment

பொங்கல் பரிசு ரூ 2500: வீடு வீடாக டோக்கன் வினியோகம் தேதி அறிவிப்பு

ரொக்கப் பணம் அனுப்பப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்

author-image
WebDesk
New Update
ration card pongal gift ration card pongal gift

ration card pongal gift ration card pongal gift

ration card pongal gift ration card pongal gift : தைப்பொங்கல் பண்டிக்கையொட்டி ரூ.2,500 பரிசு தொடர்பான அராசணையை தமிழக அரசு வெளியிட்டது. 2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கிட ரூ.5,604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisment

தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், குடும்பத்துக்கு ரூ.2,500 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, தலா 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழு நீள கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா்.

இதையடுத்து, பொங்கல் பரிசு தொகை ரூ.2,500 வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று முந்தினம் வெளியிட்டது. இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.5, 604.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி அட்டைதாரா்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு கோடியே 80 லட்சம் வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்துக்காக ரூ.484.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, பொங்கல் பரிசு தலா ரூ.2,500 வழங்கும் திட்டம், பொங்கல் பரிசுத் தொகுப்பு, இலவச வேட்டி, சேலை ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் நேற்று தொடங்கி வைத்தார்.இந்த நிலையில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், பொங்கல் பரிசுத் தொகை மற்றும் சிறப்பு தொகுப்பை வழங்குவதற்கான டோக்கனை வருகிற 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்கப்படும் என்றும், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாளை முற்பகல் 100 பேர், பிற்பகல் 100 பேர் என பிரித்து டோக்கன் வழங்கப்பட வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் ரூ.2,500ஐ ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். ரொக்கப் பணத்தை ரூ.2,000 மற்றும் ரூ.500 தாளாக வழங்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ஐந்து 500 ரூபாய்களாக வழங்க வேண்டும். ஏக்காரணம் கொண்டும் ரொக்க பணத்தை உறையில் வைத்து வழங்கக்கூடாது. ரொக்கப் பணம் அனுப்பப்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இது தொடர்பாக புகார்களுக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். புகார்கள் இருப்பின் நடமாடும் கண்காணிப்பு குழுவுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment