Advertisment

வங்கி KYC-யில் என்.பி.ஆர் : காயல்பட்டினம் வங்கியில் மொத்தமாக பணத்தை ‘வித்-ட்ரா’ செய்த பொதுமக்கள்

திங்கள் கிழமை மதியம் மட்டும் சுமார் 1 கோடி வரை வித்ட்ரா செய்துள்ளனர் அம்மக்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
RBI adds NPR to KYC papers

RBI adds NPR to KYC papers

RBI adds NPR to KYC papers : ஒவ்வொரு வங்கியிலும் வாடிக்கையாளர்கள் புதிதாக அக்கௌண்ட் திறக்க வேண்டும் என்றால் நோ யுவர் கஸ்டமர்ஸ் ( Know Your Customer) என்று வெரிஃபிகேசனுக்கான சில ஆதாரங்களை நாம் வங்கியில் தருவோம். ரேசன் கார்ட், ஆதார் அட்டை போன்றவை அதில் அடங்கும். அந்த வரிசையில், ஆர்.பி.ஐ சமீபத்தில் ஆதரமாக என்.பி.ஆர் எனப்படும் தேசிய மக்கள்த் தொகை பதிவேடு விபரங்களை உள்ளடக்கிய கடித்தையும் இணைக்கலாம் என்று கூறியது. இது குறித்து  தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் பேங்கில் அறிவிப்புகள் வெளியான நிலையில் காயல்பட்டினம் பகுதியில் இருக்கும் பெரும்பான்மையான முஸ்லீம் கணக்கர்கள் தங்களின் வங்கிகளுக்கு சென்று தங்களின் பணத்தை எடுக்க துவங்கினர்.

Advertisment

“அனைத்து தரப்பு மக்களும் இந்த அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்ட போது நாங்கள் பணம் எடுப்பதற்காக நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய சூழல் உருவானது. அதனால் தான் இப்போது முன்பே வந்து பணம் எடுத்துக் கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்” ஒரு அரசு அதிகாரி. “இது குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய போது ஆர்.பி.ஐ ஏன் இதை கட்டாயமாக்கியது என்று அவர்களால் விளக்கம் தர முடியவில்லை. இந்தியாவில் பெரும்பான்மையான மாநிலங்களில் இன்னும் என்.பி.ஆர் முழுமையாக கொண்டுவரப்படாத நிலையில் ஏன் இதனை செய்ய வேண்டும்” என்றும் நம்மிடம் கூறினார் அந்த பெண்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க 

வங்கி அலுவலர்களிடம் விசாரித்த போது, “எங்களின் பல்வேறு வங்கிக் கிளைகளிலும் இதே போன்ற சூழல் தான் நிலவி வருகிறது. பின்பு நாங்கள் காயல்பட்டினம் மதத்தலைவர்கள் மற்றும் ஜமாத் கமிட்டியாரை அணுகி இது குறித்து விளக்கினோம். ஆனாலும் மீண்டும் அந்த வாடிக்கையாளர்கள் எங்களின் வங்கிகளை அணுகுவார்களா என்று எங்களுக்கு தெரியவில்லை. திங்கள் கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 1 கோடி வரையில் பணத்தினை எடுத்துள்ளனர் வாடிக்கையாளர்கள். செவ்வாய் கிழமைக்கு மேல் தான் இங்கு ஓரளவுக்கு நிலைமை சரியானது. எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்கள். மொத்தமாக பணத்தினை அவர்கள் எடுத்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்” என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள் வங்கி ஊழியர்கள்.

சென்ட்ரல் வங்கியின் துணைப் பொது மேலாளர் ஆர். எல். நாயக்கிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, காயல்பட்டினத்தில் நடைபெற்றது துரதிர்ஷ்டமானது. மக்கள் ஆர்.பி.ஐயின் அறிவிப்பை மக்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம். ஒருவர் ஆதார் அடையாள அட்டையை ப்ரூஃபாக் காட்டினால் அதுவே போதுமானது. பான் கார்ட் மட்டும் கொண்டு வந்தால் அத்துடன் முகவரி சரிபார்க்க ஒரு ப்ரூஃபினை கேட்போம். பாஸ்போர், வாக்காளர் அடையாள அட்டை, ட்ரைவிங் லைசன்ஸ், ஆதார் என்ற வரிசையில் வெரிஃபிகேசனுக்காக மட்டுமே தற்போது கூடுதலாக என்.பி.ஆரை இணைத்துள்ளது. யாராவது என்.பி.ஆர் கடிதத்துடன் வந்தால் எங்களால் அதை மறுக்க இயலாது என்று அவர் விளக்கம் அளித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment