By: WebDesk
Updated: August 1, 2020, 09:17:52 PM
Renowned neurologist Dr MB Pranesh dies due to COVID-19 in Coimbatore : கோவை தனியார் மருத்துவமனை ஒன்றில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றி வந்தவர் மருத்துவர் ப்ரனேஷ். நோயாளிகளை கவனிக்கும் விதத்திலும் சரி, அவர்களை அக்கறையுடன் நடத்துவதிலும் சரி அவரைப் போன்று யாரும் இல்லை என்று பெயர் பெற்றவர்.
மேலும் படிக்க : ஆன்லைன் வகுப்பிற்கு டிவி தேவையாம்… தாலியை அடமானம் வைத்த அம்மா!
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றினார் பிரனேஷ். அரசு மருத்துவமனையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, பீளமேட்டில் அமைந்திருக்கும் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் நரம்பியல் மருத்துவராக பணியாற்றினார். மேலும் பி.எஸ்.ஜி. மருத்துவக்கல்லூரியின் நரம்பியல் துறையில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரில் எம்.பி.பி.எஸ், எம்.டி. மற்றும் டி.எம் முடித்த அவர் லண்டனில் இருக்கும் ராயல் காலேஜ் ஆஃப் பிசிஸியனில் உறுப்பினராகவும் அங்கம் வகித்தார்.
சில நாட்களுக்கு முன்பாக கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. 83 வயதாகும் அவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா உள்ளது. கொரோனா நோய்க்காக கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Renowned neurologist dr mb pranesh dies due to covid 19 in coimbatore